இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர்.
பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார்.
ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்து ஒன்று கம்பத்தில் மோதிஎதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை அண்ணாசாலையில் காலை முதலே வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது சென்னை சென்ட்ரலை நோக்கி, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வந்த அரசுப் பேருந்து ஒன்று சென்னை ஸ்பென்சர் பிளாசா அருகே திடீரென தன்கட்டுப்பாட்டை இழந்தது சாலையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. 6 பெண்கள் உள்பட 8 பேர் இக்கோர விபத்தில் படுகாயமடைந்தனர். பின் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
டெல்லியில் காஷ்மீரி கேட் அருகே ஒரு நடைபாதையில் நேற்று இரவு மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது கார் ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த 12-வது பள்ளி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சுமார் காலை 5.45 மணியளவில் நடைப்பெற்றது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காட்பாடி அருகே கோரந்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கடம் இடிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோரந்தாங்கலில் தனியார் நிறுவனம் பள்ளிக் கட்டிடம் கட்டி வருகிறது. இன்று கட்டிடம் கட்டும்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது துரிதகதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலைகளில் அடுத்ததடுத்து விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்சசெந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு நேற்று விபத்திற்குள்ளானது.
இதில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். இந்த படகில், 10 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில், சுமார் 30-க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பனியின் காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புகாரியன் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90-ஆக உள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 15 குழந்தைகள் அட்மிட் செய்து வைத்திருந்த வார்டில் அதிகாலை 3.35 மணியளவில் தீ பற்றி எரிந்தது. ஆறு முதல் ஏழு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக மேலதிகாரிகள் கூறியுள்ளனர்.
எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் பலியானதாகவும், 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறால் நிலைதடுமாறி ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.