இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர்.
பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
மருத்துவ குழுவின் முயற்சியும், பதிக்கப்பட்ட பெண்ணின் ஒத்துழைப்புமே இந்த சாதனையை நடக்க வழிவகுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.