இஸ்லாமியர் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் அணைத்து இஸ்லாமியப் பெருமக்கலளுக்கும் தமிழக முதல்வர் தனது பக்ரீத் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைப் பணிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள், இறைவனின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்தார். இறைவனுக்காக தன்னுடைய மகனையே இழக்க முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தையும் இறை பக்தியையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இனிய நாளில், இஸ்லாம் போதிக்கும் அன்பு, கருணை, இரக்கம், பணிவு போன்ற நற்குணங்களை கடைப்பிடித்து, மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென்று தெரிவித்து, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.