லாலு பிரசாத் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த போது ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்த்தில் முறைகேடு என சிபிஐ புகார்.
பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
14 வயதான பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாணவியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.
பீகார் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கலைப்பிரிவில் 82.6% மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இசை பற்றியே தெரியாதவர் போல பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அவரது பதில்கள் அனைத்துமே ஏமாற்றம் தரும்படி இருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநரகம் அவரிடம் விசாரணையும் நடத்தியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்திருந்த கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் மொரிசீயஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்துடனான மதிய விருந்தில் இன்று கலந்து கொள்கிறார்.
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலவில்லை எனக் நிதீஷ் குமார் அனுப்பி வைத்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ள சஹார்சா மாவட்டத்திலிருந்து தலைநகர் பாட்னாவுக்கு செல்ல வேண்டிய சஹார்சா - பாட்னா ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சஹார்சா ரயில் நிலையத்தின் 2வது நடைமேடைக்குள் நுழைந்தபோது இரு பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பெட்டிகளும் பக்கவாட்டில் கவிழ்ந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய ரெயில் சேவைகள் சுமார் மூன்று நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.
கவிழ்ந்த பெட்டிகளை நிமிர்த்தி இணைத்த பின்னர் காலை 9.30 மணியளவில் அந்த ரயில் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது.
உபி., மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் துவக்கவிழா லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும் கலந்து கொள்வதற்காக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் லக்னோ சென்றடைந்தார்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பார் நடன மங்கைகளுடன் குடித்து விட்டு நடனமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி நிதிஷ்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மநிலம் நாளந்தாவில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த சுற்றுலா திடீரென ரத்து செய்யப்பட்டதால் மணவர்கள் ஆத்திரத்தில் பள்ளியையும், பள்ளியில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்குகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.