காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து மோடியுடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார் நிதீஷ் குமார்

Last Updated : May 27, 2017, 10:15 AM IST
காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து மோடியுடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார் நிதீஷ் குமார் title=

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்திருந்த கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் மொரிசீயஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்துடனான மதிய விருந்தில் இன்று கலந்து கொள்கிறார்.

குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலவில்லை எனக் நிதீஷ் குமார் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள மொரிசீயஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்துக்கு பிரதமர் நரேந்திர் மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்குமாறு மோடி சார்பில் நிதீஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று நிதீஷ் குமார் டெல்லி செல்கிறார்.

Trending News