கூட்ட நெரிசல்கள் அதிகம் உள்ள இடங்களிலேயே திருட்டு நிகழ்வுகளும் அதிகம் நடக்கின்றன. கோவில் திருவிழா, விளையாட்டு மைதானம், அரங்கங்கள் போன்ற இடங்களில் கூட்டம் இருப்பதை காட்டிலும் அதிக நெரிசல் உள்ள பகுதி இரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பிரயாண நிலையங்கள் தான்.
இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விமான ஊழியர்களிடம் பிரச்னை செய்பவர்கள் மீண்டும் விமானத்தில் பறக்க தடை விதிக்கும் வகையில் மத்தியஅரசு இன்று 'நோ-ஃப்ளை லிஸ்ட்' வெளியிட்டது.
இந்த பட்டியல் ஆனது மூன்று நிலை தடைகளை பற்றி கூறியுள்ளது:-
1. விமான ஊழியர்களை திட்டுவது, அடிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டால் 3 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை.
2. சக பயணிகள், ஊழியர்களை தாக்குதல் போன்ற செயல்பாடுக்கு 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை.
3. விமானத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டால் 2 ஆண்டுக்கள் விமானத்தில் பறக்க தடை.
தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது .
வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குற்றாலத்தின் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் குளிக்க தடை செய்யப்பட்டது.
இதனால் பயணிகள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டம். இந்த திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று திரும்புவதற்காக இலவச சைக்கிள் சேவை திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று, திடீரென தடம்புரண்டதில், 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள குனேரு ரயில்நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக, நேற்று நள்ளிரவு ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
திடீரென ரயில் என்ஜீன், சரக்குப் பெட்டி, ஏசி பயணிகள் பெட்டி, ஜெனரல் பெட்டிகள் உள்ளிட்டவை தடம்புரண்டன. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.