ஹோலி விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில் வடமாநில தொடர்வண்டி போக்குவரத்துகளில் அதிகளவு நெரிசல் காணப்படுகிறது!
வடமாநில இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஹோலி ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு என கருதப்படுகிறது.
வட நாட்டில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இந்தப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Rush of passengers seen on trains at Mathura station after the holidays for #Holi pic.twitter.com/C0wdm8lciO
— ANI UP (@ANINewsUP) March 6, 2018
இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர்ந்து விடப்பு அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர் சென்ற மாணவர்கள், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவரும் நிலையில் தொடர்வண்டி பயணம் ஆனது சற்று நொரிசலுடனே காணப்பட்டு வருகிறது.