அலங்காநல்லூர் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பெண் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டிள்ளது
மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டடுள்ளனர்.
மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கலைந்து போகாத போராட்டக்காரர்களின் மேல் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் ஈடுபட்டுள்ளதால்
மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம் அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, ஆனால் நிரந்தர சட்டம் வேணும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி இன்று மனுதாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி தவறானது என நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக நிர்மலா சீதாராம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-ஜல்லிகட்டு க்கு தடை கோரி "மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு" என்று சில TV channelsல் வரும் செய்தி முற்றிலும் தவறு. மேலும் அமைச்சர் மேனகா காந்தியுடன் சில நிமிடங்கள் முன்னால் தொலைபேசியின் மூலமாக பேசிய போது தான் தடை கோரி மனு ஏதும் பதிவு செய்யவில்லை என நிர்மலா சீதாராம் கூறியுள்ளார்.
சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சாலைகளில் குவிந்துள்ளனர். அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். கடற்கரை சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:-
அமைதியான முறையில் போராடினீர்கள். உங்களுடைய குறிக்கோள் நிறைவேற்று பட்டுள்ளது. எனவே எப்படி அமைதியான முறையில் போராடினீர்களோ, அதே முறையில் கலைந்து செல்லுங்கள். சட்டம் ஒழுங்கை மதித்து இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள். தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எடுத்துள்ள போராட்டத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் கைகொடுத்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்ற இரு வீரர்கள் பலியானார். மேலும் இதில் 57-க்கும் மேற்பட்டோர் டுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மறியல் போராட்டம் நடத்தினர். அவசர சட்டம் இயற்றப்பட்டாலும் நிரந்தர தீர்வு வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் காலையில் புதுக்கோட்டை ராப்பூசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்களை சமரசம் செய்ய இயலாத அதிருப்தியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.
பின்னர், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் சிறு தீப்பொறியாக தொடங்கியா ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று சென்னை மெரீனா, கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம், சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறது ஜல்லிக்கட்டு புரட்சி.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி அருகே மணப்பாறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்த வீடியோ:-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக மதுரை வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சென்னை திரும்ப திட்டமிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம்:-
மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே கோபையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றபோதிலும், மாணவர்கள் விரைந்து வந்து அதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கூறியது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை டிவிட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனை ஏற்க போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர் கூட்டமும் மறுத்துவிட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடந்த திங்கட் கிழமை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனை ஏற்க போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர் கூட்டமும் மறுத்துவிட்டது.
6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. இளைஞர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.