பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகக்குறைவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெட்லி கலந்து கொள்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் ராஜ்நாத்திற்கு பாகிஸ்தானில் அளிக்கப்ப்டட வரவேற்பில் மத்திய அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
சார்க் நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சார்க் உள்துறை அமைச்சர்களின் ஒரு நாள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானில் நடக்கும் சார்க் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் வருகை தந்தால் நாடு தழுவிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராஜ்நாத் சிங்கை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அதேவேளையில், ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.