பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக நரேந்திர மோடி அவர்கள் தனது சொந்த ஊரான குஜராத்தில் உள்ள வத் நகருக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அவர் மருத்துவமனையை திறந்துவைத்தார்.
பின்னர் பேசுகையில், இந்த நகரம் 2,500 வருடத்திற்கு முன்னர் இருந்து வருகிறது. இன்று நான் இருக்கும் நிலைக்கு இந்நகரத்தின் கலாசாரம் காரணம். எனக்கு சிறப்பான மதிப்புகளை இந்த நகரம் கற்று கொடுத்துள்ளது.
இரண்டு நாள் பயனமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொண்டார். இந்த பயனத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி குஜராத் மாநிலம், பழைய துவாரகா மற்றும் புதிய துவாரகா நகரை இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அடிகல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோடி தெரிவித்ததாவது,
இரண்டு நாள் பயனமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயனத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி குஜராத் மாநிலம், துவாரகா நகருக்கு இன்று செல்லும் பிரதமர், அங்குள்ள துவாரகாதீஷ் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். பின்னர் அங்கிருந்து ஓஹா நகருக்கு இடையே பாலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கின்றார். பின்னர் அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அரசு முறை பயணமாக இன்று குஜராத் வந்தனர்.
ராஜ்யசபா தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் குஜராத் திரும்பினர்.
அந்த 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் அகமது படேல் வரவேற்றார். தேர்தல் நடைபெறும் வரை எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க பாதுகாப்பாக தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 8 ம் தேதி குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
இந்நிலையில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகியதால், மற்றவர்கள் அணி மாறாமல் இருக்க, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநில மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுக்கு தாவாமல் இருக்க அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் பல இடங்களில் வெள்ளத்தின் காரணத்தால் 25000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக குஜராத்தில் கடும் மழை பெய்து வந்ததால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாநிலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை அளவில் 56.61% மழை பதிவாகியுள்ளது. வெள்ளத்தில் பனஸ்கந்தா பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த 10,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் 21-வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) இன்று பதவி ஏற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசிம் ஜைதியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) பதவி ஏற்றார். இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
பிரதமர் மோடியின் மூன்று ஆண்டுகால வெற்றியை பாஜக கட்சி கொண்டாடி வருகிறது. குஜராத் மாநிலம் அமரெலியில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.
அப்போது வந்தே மாதரம் என கோஷம் எழுப்பிய வாலிபர் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீது வளையல்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் வாலிபர் 20 வயது கேதான் காஸ்வாலா என தெரியவந்து உள்ளது, அவர் அமரெலி மாவட்டம் மோதா பன்டாரியா கிராமத்தை சேர்ந்தவர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்னர்.
குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்படி, இருவரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், நாட்டில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்த குஜராத்தில் உள்ள வெடிப்பொருள் ஃபேக்டரியில் இருந்து ரசாயன வெடிப்பொருட்களை வாங்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வயது மூப்பு காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது ராஜினாமாவை பா.ஜ., தலைமையும் ஏற்றுக் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.