புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவி ஏற்பு!!

Last Updated : Jul 6, 2017, 02:30 PM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவி ஏற்பு!! title=

இந்தியாவின் 21-வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) இன்று பதவி ஏற்றார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசிம் ஜைதியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) பதவி ஏற்றார். இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.

 

 

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்த போது, அம்மாநில தலைமைச் செயலாளராக அச்சல் குமார் ஜோதி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News