பாஜக தேசியச் செயலாளராக எச்.ராஜா தொடர்ந்து திராவிடத்தையும், பெரியாரையும் தாக்கி பேசி வருகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பலமுறை பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மீண்டும் தந்தை பெரியார் மற்றும் மணியம்மை பற்றி பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும்.
விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனத்தால் தற்போது பெறும் சர்ச்சை ஆகி வருகிறது.
தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். பல தடைகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:
மணி விழாவுக்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து வருகிறேன். அந்த வகையில் மணி விழா அழைப்பிதழை கொடுக்கவே மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இதில் எந்தவித அரசியலும் இல்லை. அரசியலை பற்றி பேசவும் இல்லை. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரிடம் நலம் விசாரித்தேன் என்று கூறினார்.
நீட் தேர்விற்கு எதிராக சென்னையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது பினாமிகளின் ஆர்ப்பாட்டம் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இன்றைய எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தனியார் உறைவிட பள்ளிகள், கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளின் போராட்டம்.
பாராதிய ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளார்.
சென்னை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-
விஸ்வரூபம் பட பிரச்சினையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார். தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு திமுக-வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார் என எச்.ராஜா கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹானை முதுகெலும்பில்லாத கோழை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலை பற்றி தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது,
முதல்வர் ஆசை கமல்ஹாசனுக்கு மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். ஆனால் முதல்வர் ஆகுவதற்கு தகுதி வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.