பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ள குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்த்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்த்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது.
பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு இன்றும் (சனிக்கிழமை) தொடர்கிறது. பலி எண்ணிக்கை 170ஆக உயர்வு.
வெள்ளம் சூழ்நிலை மாநிலத்தின் 15 மாவட்டங்களில் மோசமாகி, மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,688 பஞ்சாயத்துகளில் மொத்தம் 108 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் இடர்பாடு சீராய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு யோகி ஆதித்யாநாத் முதல் - அமைச்சராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்றதும், அதிரடியாக பல அறிவிப்புகளும், திட்டங்களும் செயல்படுத்தினார்.
உ.பி., மாநிலத்தில் பாஜக அரசு பதவி ஏற்று 100 நாட்களில் ஆகிவிட்டது. இதனையடுத்து, 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட நலத்திட்டப் பணிகள் தொடர்பான சாதனை பட்டியல் அடங்கிய கையேட்டினை யோகி ஆதித்யாநாத் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
உ.பி., மாநில போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து கோண்டா டிப்போவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பரெய்லி மற்றும் ஷாஜகான்பூர் பகுதிக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 24 அரசு பேருந்து சென்று கொண்டிருந்த அப்போது எதிரே வந்த லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது அந்த மாநில அரசு நிர்வாகம்.
இந்நிலையில் தற்போது அம்மாநில முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் மற்றொரு அதிரடி உத்தரவு பிரபித்துளார், 84 ஐஏஎஸ் அதிகாரிகள், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது, நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாதில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 2000 எடுத்துள்ளார்.
நோட்டுக்களை எண்ணும் போது இவருக்கு ஒரு ரூ. 2000 நோட்டு மேலும் கீழும் சரியாக வெட்டப்படாமல் இருந்த நோட் கிடைத்தது. உடனே அவர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து தவறுதலாக அச்சிடப்பட்ட நோட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பயணிகள் ரயில் ஒன்று, சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கலிண்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம், தண்ட்லா ஜங்ஷன் அருகே வந்தபோது, எதிரே சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது.
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்களும் நேருக்கு நேர் வந்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ரயில் டிரைவர்கள் போராடி, ரயில்களை நிறுத்தினர்.
நள்ளிரவில் நிகழ்ந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சில மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், தலா ஒரு வீடும் வழங்க உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.