உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
உ.பி., மாநில போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து கோண்டா டிப்போவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பரெய்லி மற்றும் ஷாஜகான்பூர் பகுதிக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 24 அரசு பேருந்து சென்று கொண்டிருந்த அப்போது எதிரே வந்த லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் தூக்கிக்கொண்டிருந்த பயணிகள் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் கூறுகையில்:-
பேருந்தின் கண்ணாடி வழியாக ஒரு சிலர் தப்பிவிட்டனர். இதில் கிட்டத்தட்ட 20 பேர் தப்பியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.