உணவு வகைகளிலேயே மன அழுத்தத்தைக் குறைப்பவையும் இருக்கின்றன. அவைகளை பற்றி குறிப்புகள் சில
வாழைப்பழம் மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது. மன அழுத்தத்துக்கு நல்லது.
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த்தூளைப் பாலில் சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது.
மண்பானைத் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.
ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை யாகும்.
உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்தால் நிம்மதியான தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும்.
உணவும் விஷமாகும் என்று எத்தனை பேருக்கு தெரியும், நாம் பயன்படுத்தும் உணவின் விதம் சிறிது மாறினாலும் உணவே ஆபத்தை விளைவிக்கும் அபாயத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கரும்பு என்றால் பிடிக்காத என்று கூறும் மனிதர்களே இல்லை, கரும்பில் உடலுக்கு நல்லது. ஆனால் கரும்பு சாப்பிட் உடன் தண்ணிர் அருந்தினால் வாய்புண்கள், வயிற்றுபோக்கு, உதடு வீக்கம் போன்றவைகள் ஏற்படும்.
மீன் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது, தயிர் + வாழைப்பழம் சாப்பிட கூடாது.
சாராயம் அருந்தி விட்டு வாய் கசப்பு தன்மைகாக சிறிது சக்கரை உண்டால் ,உடலுக்கு பாதிப்பு உண்டாகும்.
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது.
28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும்.
மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.