ஏற்கெனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் தற்போது 3வது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரணப்பொருட்களை வழங்குவதில் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசவும் தெரியும், கற்களை வீசவும் தெரியும் என்ற ஜீயர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல்வர் எடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக (அம்மா அணி), ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சிதலைவி அம்மா) அணிகள் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த அவசர ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
முன்னதாக இரு அணியாக இருக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டுமென்றால் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. இதற்கு எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது.
தற்போது ஜாமீனில் வெளிவந்த தினகரன் இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றார்.
இன்று டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தந்த தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளை சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.