தினகரனை சார்ந்து நாங்கள் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Jun 5, 2017, 05:01 PM IST
தினகரனை சார்ந்து நாங்கள் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் title=

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த அவசர ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

முன்னதாக இரு அணியாக இருக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டுமென்றால் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. இதற்கு எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது.

தற்போது ஜாமீனில் வெளிவந்த தினகரன் இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றார். 

இந்தக் குழப்பமான சூழலில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். கூட்டத்தை தொடர்ந்து முதல்வரை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்:-

முன்பு அறிவித்தபடி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. அவர்கள் இல்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் ஒதுங்க வேண்டும். இல்லையென்றால் விளைவு விபரீதமாகும்.

இவ்வாறு பேட்டி அளித்தார்.

Trending News