சென்னையில் 'துக்ளக் இதழ்'' 47-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துக்ளக் ஆண்டு விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல். இயற்கையோடு ஒன்றிணைந்த கலாச்சாரமே நமது நாட்டிற்கே வலுசேர்க்கிறது.
இன்று நடிகர் ரஜினிகாந்தின் 66-வது பிறந்தநாள் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.
T 2469 - It is Rajnikant's birthday on Dec 12th and we wish him greater glory happiness and good helath .. pic.twitter.com/hRQRyYZ7Q6
மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், பிரபல எழுத்தாளர் என தன்மை கொண்டவர் சோ ராமசாமி. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.