ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 1500 ரூபாய் வைப்பு இருப்பு தொகையின் அடிப்படையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனினை அறிமுகம் செய்தது. இதற்கனா முன்பதிவு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
ஜியோவின் இந்த திட்டமும் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது.
அதனால் தீபாவளிக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது கட்டமாக ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனின் முதற்கட்டமாக முன்பதிவு செய்த சுமார் 60 லட்சம் பேருக்கும் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜியோபோன் முன்பதிவு செய்தோருக்கு அக்டோபர் 19-ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என ரிலையனஸ் ஜியோ டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. அதில்,
எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றி, எவ்வித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் ஜியோபோன்கள் திட்டமிடப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு முன் ஜியோபோன் விநியோகம் செய்யப்பட்டும்.' என தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ஜியோபோன் நேற்று முதல் டெலிவரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ போன்களை கிராமப்புறங்களில் இருந்து டெலிவரி செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி நேற்று அறிமுகம் செய்தார். இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்த ஜியோ பீச்சர் ஃபோனை எந்த கட்டணமும் இல்லாமலேயே முன்பதிவு செய்யலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபோன் என்ற புதிய பேசிக் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், வழக்கமான பேசிக் மொபைல்கள் போல இல்லாமல் குரல் மூலம் இயக்கும் வசதி, எமர்ஜென்சி கால் வசதி போன்றவையும் உள்ளன. இந்த ஜியோ ஃபோன் முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் ஆகும்.
அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகம் செய்கிறார்.
ஜியோ பீச்சர் ஃபோனின் சிறப்பம் அம்சங்கள் பின்வருமாறு:-
2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம்,
2 மெகாபிக்சல் ரியர் கேமரா, வி.ஜி.எ. முன்பக்க கேமரா, 2000
எம்.எ.எச்.பேட்டரி திறன், எஃப்.எம் ரேடியோ, ப்ளுடூத் 4.1, வீடியோ காலிங்
மேலும் இந்தியாவில் ஜியோ ஃபீச்சர் ஃபோனின் விலை ரூ.500 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.