TN Assembly!பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? முதலமைச்சர்!

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 4, 2018, 01:44 PM IST
TN Assembly!பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? முதலமைச்சர்! title=

12:57 04-06-2018
சட்டப்பேரவையில் தன் பெயரை சொல்லி அழைக்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் என கூற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என்றும் அவர் பேசியுள்ளார். 


12:02 04-06-2018

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்!

இது குறித்து அவர் கூறும்போது,,! மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்களே தவிர மக்கள் அல்ல என்றார். 

மேலும் அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது. உருட்டுக்கட்டைகள்,பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


11:49 04-06-2018
ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


11:09 04-06-2018

தமிழக சட்டசபையில் இன்று 67 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.


கடந்த மாதம் 29ம் தேதி கூடிய சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை திமுக சட்டசபையில் பங்கேற்காது என்று அறிவித்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனே  பதவி விலக வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின்  பேசினார்.

இந்நிலையில், தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறைக்கு நிதி ஒதுக்கீடு பற்றி இன்று விவாதம் நடத்தவுள்ளனர். 

இதுகுறித்து பேசிய ஸ்டாலின், மக்கள் பலர் திமுக சட்டசபையில் பங்கேற்கவில்லை என்றால் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி விடுவார்கள். மக்களின் குரலை சட்டசபையில் பிரதிபலியுங்கள் என பலர் நேரிலும் தொலைபேசி வாலியாகவும் கோரிக்கை வைத்ததால் புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம் என்றார். எவ்வளவு குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்து, அ.தி.மு.க. அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை தகர்த்தெறிவோம் என ஸ்டாலின் கூறினார்.

Trending News