தாஜ்மஹாலை சுற்றி '3-D' ஓவியங்கள் வரைய திட்டம்!!

சுற்றுலா பயணிகளை கவர தாஜ்மஹாலை சுற்றி  '3-D'  ஓவியங்கள் வரைய உத்திரப் பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது!

Last Updated : May 1, 2018, 06:16 PM IST
தாஜ்மஹாலை சுற்றி '3-D' ஓவியங்கள் வரைய திட்டம்!! title=

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் உலக அளவில் பிரபலமானது. இந்தியர மட்டும் அல்லாமல் உலக முழுவதிலும் சுற்றுளா பயணிகள் வந்து தாஜ்மகாலினை பார்வையிட்டு வருகின்றனர்.

தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் தாஜ் மஹாலை சுற்றியுள்ள சுவர்களில் '3-D' ஓவியங்களை வரைய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, உ.பி., மாநில 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அதிகாரி ஆர்.கே.சிங் கூறியதாவது....!

மொகலாயர் வரலாற்றின் அடிப்படையில், தாஜ்மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்துமிட சுவர்களில் '3-D'  ஓவியங்கள் வரையப்படும். 

ஆக்ரா நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்காக நகரின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.    

Trending News