சூழ்நிலை கருதி காலா படம் வெளியிடுவதை தவிர்க்காலம்! கர்நாடக முதல்வர்!

தற்போதைய சூழ்நிலையில் காலா படம் வெளியிடுவதை தவிர்த்திருக்கலாம் என்று கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 6, 2018, 06:44 PM IST
சூழ்நிலை கருதி காலா படம் வெளியிடுவதை தவிர்க்காலம்! கர்நாடக முதல்வர்! title=

பெங்களூரு: காலா பட விவகாரத்தில் கட்சிகளின் நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் காலா படம் வெளியிடுவதை தவிர்த்திருக்கலாம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். எனினும், எந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இப்படத்தை திரையிட தடை விதித்தது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை.

இந்த நிலையில் ‘காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் இதுகுறித்து மனு தாக்கல் செய்தது. அதில் ‘காலா’ படம் வருகிற 7–ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது என்பது குறிபிடத்தக்கது.

Trending News