இந்திய பிரம்மோஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி!

ஒடிசா கடற்கரையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது!

Last Updated : May 21, 2018, 03:28 PM IST
இந்திய பிரம்மோஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி! title=

ஒடிசாவின் பாலசோர் நகரில் சண்டிபூரில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் இந்திய கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக இன்று பரிசோதனை செய்யப்பட்டது. உலகிலேயே மிக வேகமுடன் செல்லும் சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரமோசின் வாழ்நாள் 10 வருடங்களில் இருந்து 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு பிரமோஸ் குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் நடத்தப்படும் முதல் பரிசோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News