ஜியோவின் மாஸ் பிளான்! ஒரே ரீச்சார்ஜில் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 3 OTT தளங்கள்

ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் பேம்லி பிளானில் ஒரு பிளானை 4 பேர் பயன்படுத்தலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2022, 02:10 PM IST
  • ஜியோவின் புதிய பேம்லி பேக்
  • 4 பேர் வரை பயன்படுத்தலாம்
  • 3 ஓடிடி தளங்களை பார்க்க முடியும்
ஜியோவின் மாஸ் பிளான்! ஒரே ரீச்சார்ஜில் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 3  OTT தளங்கள் title=

நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்டின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் சிறப்பானது. உண்மையில், ஜியோ போஸ்ட்பெய்டில் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 999  ரூபாய் பேம்லி பேக் திட்டத்தில் 4 பேர் வரை பயன்படுத்தலாம். இதில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய மற்றும் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது. 

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளி தெளிக்கும் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் யூசர்களுக்காக புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தமுறை போஸ்ட் பெயிட் யூசர்களுக்காக புதிய பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பேம்லி பேக் திட்டம். இதில் பல வகையான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?

ரூ.999 புதிய பிளான்

இந்த குடும்பத் திட்டத்தின் விலை ரூ.999. 4 பேர் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் யூசர்கள் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுதவிர, இந்த திட்டத்தின் கீழ் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் மொபைல் டேட்டா பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா தீர்ந்துவிட்டால், ஒரு ஜிபிக்கு ரூ.10 வீதம் செலுத்தி டேட்டாவை கூடுதலாக பயன்படுத்தலாம். உங்கள் ரீசார்ஜ் திட்டம் செல்லுபடியாகும் வரை இந்த டாப்அப்பும் செல்லுபடியாகும்.

பிரபல OTT ரீச்சார்ஜ் திட்டங்கள்

ஜியோவின் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் சந்தாவையும் 1 வருடத்திற்கு இலவசமாகப் பெறுவீர்கள். இது தவிர, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோவின் பல அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதி உள்ளது.

மேலும் படிக்க | கார் பராமரிப்பு கண்ணை கட்டுதா? இந்த டிப்ஸ் சிறந்த மைலேஜ் பெற உதவும்

ரூ. 799 திட்டம்

நிறுவனத்தின் ரூ.799 திட்டமும் பல பயனர்களுக்கு ஏற்றது. இதில் நீங்கள் 2 கூடுதல் சிம்களை சேர்க்கலாம். இதுவும் ஒரு குடும்ப போஸ்ட்பெய்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் 150 முதல் 200 ஜிபி டேட்டா வரை ரோல்ஓவர் வசதியை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டங்கள் உகந்ததாக இருந்தால் ரீச்சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News