இரண்டு செல்ஃபி கேமரா... மிரட்டும் Xiaomi 14 Civi - முன்பதிவு செய்தால் என்னென்ன இலவசம் தெரியுமா?

Xiaomi 14 Civi ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள், விலை, முன்பதிவு மற்றும் தள்ளுபடி விவரங்கள் அனைத்தையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 12, 2024, 03:46 PM IST
  • Xiaomi 14 Civi இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.
  • இது வரும் ஜூன் 20ஆம் தேதி பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
  • இதனை இன்று முதல் பிளிப்கார்டில் முன்பதிவும் செய்துகொள்ளலாம்.
இரண்டு செல்ஃபி கேமரா... மிரட்டும் Xiaomi 14 Civi - முன்பதிவு செய்தால் என்னென்ன இலவசம் தெரியுமா? title=

Xiaomi 14 Civi Price, Pre Booking: Xiaomi நிறுவனம் இன்று இந்தியாவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் அந்த நிறுவனத்தின் விலை உயர்ந்த மொபைல் சீரிஸான Xiaomi 14 உடன் புதிய மாடல் ஒன்றை அந்நிறுவனம் களணிறங்கியுள்ளது. Xiaomi 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Ultra என இரண்டு மாடல்கள் உள்ளன. 

Xiaomi 14 மொபைல் 69,999 ரூபாய்க்கும், Xiaomi 14 Ultra மொபைல் 99,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், இந்த Xiaomi 14 சீரிஸில் Xiaomi 14 Civi என்ற மாடலை இந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போதி இந்தியாவில் அறிமுகாகி உள்ள இந்த Xiaomi 14 Civi மொபைலின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம். 

Xiaomi 14 Civi: வேரியண்ட்கள்

Xiaomi 14 Civi இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் 12ஜிபி+512ஜிபி ஆகும். இதன் விலை 47,999 ரூபாயாகும். இதற்கு குறைந்த வேரியண்ட் 8ஜிபி+256ஜிபி உடன் வருகிறது. இதன் விலை 42,999 ரூபாயாகும். குறிப்பாக இது மூன்று வித்தியமாசமான வண்ணங்களில் கிடைக்கும். இதனை வாங்க நினைப்பவர்கள் பிளிப்கார்டில் வரும் ஜூன் 20ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் விற்பனையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள Mi ஷோரூம்களிலும், Mi.com என்ற அதன் அதிகாரப்பூர்வ தளத்திலும் நீங்கள் இதனை வாங்கலாம்.

மேலும் படிக்க | ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்

Xiaomi 14 Civi: தள்ளுபடி

Xiaomi 14 Civi மொபைலின் அறிமுக ஆப்பராக 100ஜிபி கூகுள் ஒன் ஸ்டோரேஜ் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி யூ-ட்யூப் பிரீமியம் சந்தா கிடைக்கும். அதேபோல், Xiaomi Priority Club மெம்பர்ஷிப்பும் கிடைக்கும். கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கியின் கார்டு மூலம் இந்த மொபைலை வாங்கினால் உங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதேபோல், நீங்கள் எக்ஸ்சேஞ் ஆப்பரில் இந்த மொபைலை வாங்கினால் 3 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். 

Xiaomi 14 Civi: முன்பதிவும், இலவசமும்...

இதன்மூலம் 47,999 ரூபாய் மதிப்பிலான டாப் வேரியண்டை 44,999 ரூபாய்க்கும்; 42,999 மதிப்பிலான வேரியண்டை 39,999 ரூபாய்க்கும் நீங்கள் வாங்கலாம். இந்த மொபைலுக்கான முன்பதிவு பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 2 மணி முதல் தொடங்கியது. மேலும், Mi.com இணையத்தளத்திலும் மற்றும் Xiaomi மொபைல்கள் கிடைக்கும் ஷோரூம்களிலும் நீங்கள் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதனை ஜூன் 19ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு Xiaomi Watch 3 Active இலவசமாக வழங்கப்படுகிறது. 

Xiaomi 14 Civi: சிறப்பம்சங்கள்

Xiaomi 14 Civi மொபைல் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1.5K ரெஸ்சோல்யூஷன் உடன் வருகிறது. இதன் அதிகபட்ச பிரைட்நஸ் 3000 nits ஆகும். இதில் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட்  உள்ளது. Xiaomi HyperOS உடன் வருகிறது வருகிறது. மேலும், 4,700mAh பேட்டரி உடன் வருகிறது. 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் பின்புறம் வட்ட வடிவிலான கேமரா அமைப்பு உள்ளது. 50MP+50MP+12MP என்ற கேமரா அமைப்புடன் வருகிறது. அதுமட்டுமின்றி முன்புறம் இரட்டை செல்ஃபி கேமரா உள்ளது. செல்ஃபி கேமரா அமைப்பு 32MP + 32MP உடன் வருகிறது.  

மேலும் படிக்க | Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News