Alien Searching Telescope : நாசா ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை உருவாக்குகிறது, 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கும் கிரகத்தை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படும் தொலைநோக்கி 2040 ஆம் ஆண்டுக்குள் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதை தேடும் முயற்சிகளைத் தொடங்கும்.
தொழில்நுட்பத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் விண்வெளி ஏஜென்சி நாசா ஒரு 'ஏலியன்களைத் தேடும்' (alien-hunting) தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது, இது ஏவப்பட்டு இறுதிக்கும் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புக் கொண்ட ஒரு கிரகத்தையாவது 2050 க்குள் கண்டுபிடிக்க முடியும்.
2040 ஆம் ஆண்டில் புதிய தொலைநோக்கி ஏவப்பட்ட பிறகு, வாழும் உயிரினங்கள் இருப்பதை உணர்த்தும் "பல்வேறு வகையான உயிர் கையொப்பங்களை" தேடுவதை இந்த திட்டம் முன்னெடுக்கிறது. இந்தத் திட்டத்திற்கு Habitable Worlds Observatory (HWO) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
NASA தலைமை விஞ்ஞானி Dr Jessie Christiansen இந்த திட்டம் பற்றி விரிவான தகவல்களை தெரிவித்தார். "நமது வாழ்நாளில் நமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள ஒரு கிரகம் வளிமண்டலத்தில் இருக்கிறது என்பதற்கான சமிக்ஞையை" இந்த திட்டம் கண்டுபிடிக்கும் நாசா தலைமை விஞ்ஞானி நம்புகிறார்.
பூமியைப் போன்ற சுமார் இருபத்தைந்து கிரகங்கள், சூரியனைப் போன்ற நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கலாம் என இந்தத் திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். "சூப்பர் ஹப்பிள்" போன்றா தொலைநோக்கியாக, HWO இன் தொலைநோக்கி இருக்கும், இது மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பூமியின் அளவில் இருக்கும் கிரகங்களை நேரடியாகப் படம்பிடிக்கும்.
HWO, விரைவில் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான தடயங்களைக் கண்டறியும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வுகளுக்கான ஆய்வகத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் போன்ற தொலைநோக்கியும் இக்ருக்குக்ம். அது, பிரபஞ்ஞத்தில் உள்ள வளிமண்டலங்களை முழுமையாகச் சரிபார்த்து, எங்கு உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை கண்டறிய உதவும் மிகத் துல்லியமானதாக இருக்கும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற விண்வெளி ஏஜென்சி நாசாவின் எக்ஸோப்ளானெட் குழுவின் கூட்டத்தில், வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துக் கொண்டனர். அந்தக்கூட்டத்தில், ஆய்வுக்கு தேவையான கருவிகளைச் சரிபார்க்கும் திட்டங்கள் ஆராயப்பட்டன.
இந்த முயற்சிகள் தொடர்பாக New Scientist சஞ்சிகைக்கு பேட்டி அளித்தபோது, நாசாவின் தலைமை விஞ்ஞானி Dr Jessie Christiansen தெரிவித்த தகவல்களின்படி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
உயிரினங்கள் உருவாக்கும் பயோஜெனிக் வாயுக்கள், மேற்பரப்பு பயோசிக்னேச்சர்கள், ஏரோசோல்கள், வான்வழி மாசுபடுத்திகள் மற்றும் செயற்கை தொழில்நுட்ப கையொப்பங்கள் ஆகியவற்றை HWO மூலம் கண்டறியலாம் என, HWO இன் அறிவியல் கட்டிடக்கலை மறுஆய்வுக் குழுவின் (START) இணைத் தலைவரான பெர்க்லி வானியலாளர் டாக்டர் கர்ட்னி டிரஸ்சிங் தெரிவித்தார்.
கிரகம் மற்றும் கிரக அமைப்பு பற்றிய கூடுதல் தகவல்கள். உயிரினங்கள் இருப்பதை புரிந்துக் கொள்வதற்கும், தவறான புரிதல்களை நிராகரிப்பதற்கும் தேவைப்படும். 2040 இல் HWO வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரத்தை வழங்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ