பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ் ஆப், தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது, பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் 3 புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
முதலாவது, இனி வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து யாருக்கும் தெரியாமல் பயனாளர்கள் வெளியேற முடியும். இப்போது நாம் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து வெளியேறினல், அது குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இனி பயனாளர்கள் தாங்களாகவே யாருக்கும் தெரியாமல் வெளியேற முடியும். ஒருவர் குழுவிலிருந்து வெளியேற விரும்பும் போது அந்த தகவல் அட்மின்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். இந்த வசதி, இந்த மாத இறுதிக்குள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | WhatsApp Tricks: இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த டிரிக்ஸ்
Your privacy deserves more protection.
That's why we're excited to announce three layers of security to wrap your messages in.
Learn what they do pic.twitter.com/AmV0YoZcC8
— WhatsApp (@WhatsApp) August 9, 2022
இரண்டாது ஒரு முறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை இனி ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது. முன்னதாக, ’view once’ என அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க இயலும். ஆனால், இந்த வசதி தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது சோதனையில் உள்ள நிலையில், விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக, பயனாளர்களின் Status, Profile Picture மற்றும் சுய விவரங்களை யார் பார்க்க முடியும், எந்தெந்த தகவல்களை பிறரால் பார்க்க முடியும் உள்ளிட்டவைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் பார்க்க முடியும், யார் பார்க்க முடியாது என்பதையும் இனி பயனாளிகளே தீர்மானிக்க முடியும். இந்த அம்சமும், இந்த மாத இறுதிக்குள் அமலாகும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | வாட்சப்பில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் DP-யை மறைப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ