வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இணைப்புகளுக்கான வாட்ஸ்ஆப் ப்ரிவ்யூ அம்சம்: வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். மெட்டாவின் இந்த சமூக ஊடக தளம், அவ்வப்போது அதன் பயனர்களுக்காக கவர்ச்சிகரமான பல அம்சங்களைக் கொண்டுவருகிறது.
இந்த அம்சங்களின் மூலம் பயனர்கள் இந்த செயலியை இன்னும் சிறந்த முறையிலும் எளிய வழியிலும் பயன்படுத்த முடிகின்றது. செய்திகளின்படி, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவருவதை நோக்கி செயல்பட்டு வருகிறது. இதைப் பற்றி அறிந்தால் பயனர்கள் மிகவும் மகிழ்வார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த அம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ்அப் புதிய வசதியை கொண்டு வருகிறது
WABetaInfo இன் சமீபத்திய அறிக்கையின்படி, பயனர்களுக்கு அதிக அளவில் நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய அம்சம் தொடர்பாக வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் இயங்குதளத்தின் வாட்ஸ்அப் நிலையுடன் (வாட்ஸ்அப் ஸ்டேடசுடன்) தொடர்புடையது. இந்த அம்சத்தின் கீழ், ஸ்டேடசில் தோன்றும் இணைப்பிற்கு, ஒரு ப்ரிவ்யூவை போடும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும். இது அனைவருக்கும் தெரியும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?
வாட்ஸ்அப்பில் வரும் இந்த புதிய அம்சத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்ஸ் ஆப்ஷனுக்கு ப்ரிவ்யூ (Preview) அம்சத்தை கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்களின் ஸ்டேடசில் என்ன லிங்க் உள்ளது என்பதை, அதன் ப்ரிவ்யூவை, லிங்கிற்குள் செல்லாமலேயே வாட்ஸ்அப்பில் காணலாம். இதன் மூலம், லிங்க் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என பயனர்களுக்கு தோன்றினால், அவர்கள் அதை கிளிக் செய்யலாம், இல்லையெனில் அதை ஸ்கிப் செய்து விடலாம், அதாவது தவிர்த்து விடலாம்.
இப்போது ஸ்டேடஸில் லிங்க் எவ்வாறு பணி புரிகிறது?
தற்போது, ஒருவரது வாட்ஸ்அப் ஸ்டேடசில் உள்ள லிங்கைபற்றி முன்கூட்டியே அறிய முடியாது. தற்போது நீங்கள் ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் லிங்கைக் கண்டால், அதைப் பற்றி அறிய, அதைக் கிளிக் செய்து மற்றொரு வலைப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இந்த புதிய வசதிக்குப் பிறகு, இப்படி நேரத்தை வீணடிக்க வேண்டி இருக்காது.
இந்த அம்சம் குறித்து தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இது வாட்ஸ்அப் செயலியின் iOS பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் பதிப்புகளுடன் வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் பதிப்பிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR