புதுடெல்லி: Vodafone-Idea தனது வாடிக்கையாளர்களை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக வோடபோன்-ஐடியாவின் நெட்வொர்க்கில் சில சிக்கல்கள் இருந்தன. இதற்கிடையில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை மிகவும் அற்புதமானவை. RedX குடும்பத் திட்டத்தின் பெயரில், Vi பயனர்களுக்கான பல இணைப்புச் சலுகையைக் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் 1699 மற்றும் 2299 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Vi இன் ரூ .1,699 RedX போஸ்ட்பெய்ட் திட்டம்
Vodafone Idea இன் ரூ .1,699 RedX போஸ்ட்பெய்ட் திட்டம் மூன்று இணைப்புத் திட்டம் ஆகும். அதாவது, குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவைப் (Data) பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் SMS இதில் வழங்கப்படுகிறது. இதனுடன், Amazon Prime, Netflix மற்றும் Disney + Hotstar VIP போன்ற செயலிகளின் ஒரு வருட இலவச சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 7 நாட்கள் சர்வதேச ரோமிங் பேக்கையும் Vi வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதமாக இருக்கும்.
ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா
Vi இன் ரூ .2,299 RedX போஸ்ட்பெய்ட் திட்டம்
Vodafone-Idea இன் ரூ .2,299 RedX போஸ்ட்பெய்ட் திட்டம் ஐந்து இணைப்புத் திட்டம் ஆகும். அதாவது, குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் எஸ்எம்எஸ் வழங்கப்படும். இதனுடன், Amazon Prime, Netflix மற்றும் Disney + Hotstar VIP போன்ற செயலிகளின் ஒரு வருட இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தில் 7 நாட்கள் சர்வதேச ரோமிங் பேக்கையும் Vi வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதமாக இருக்கும்.
லாக்-இன் காலம் தேவை
இந்த திட்டத்தை நீங்கள் எடுக்க விரும்பினால், நீங்கள் 6 மாதங்கள் உறுப்பினர் ஆக வேண்டும். அதாவது, நீங்கள் இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு இயக்க வேண்டும். லாக்-இன் காலத்திற்கு முன் நீங்கள் திட்டத்தை விட்டுவிட்டால், வெளியேறும் தொகை ரூ .3,000 ஆக இருக்கும்.
ALSO READ: Vodafone Idea: அட்டகாசமான திட்டங்களை அறிமுகம் செய்தது நிறுவனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR