Vivo Y36 அசத்தல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது விவோ

Vivo Y36: விவோ அதன் மிட் - ரேஞ்ச் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் பெயர் விவோ ஒய்36. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2023, 11:33 AM IST
  • Vivo Y36, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் ஒரே வேரியண்டில் கிடைக்கிறது.
  • இதன் விலை ரூ. 16,999.
  • பயனர்களுக்கு Meteor Black மற்றும் Vibrant Gold ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது.
Vivo Y36 அசத்தல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது விவோ title=

Vivo Y36 அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ அதன் மிட் - ரேஞ்ச் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் பெயர் விவோ ஒய்36 ( Vivo Y36) ஆகும். 2.5டி வளைந்த கண்ணாடி பாடியுடன் (கர்வ்ட் கிளாஸ் பாடி) வரும் இந்த போன் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோவின் இந்த சமீபத்திய ஃபோன் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வலுவான பேட்டரி மற்றும் 50MP கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. Vivo Y36 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Vivo Y36: இந்தியாவில் இதன் விலை என்ன?

Vivo Y36 ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16,999 ஆகும். பயனர்களுக்கு Meteor Black மற்றும் Vibrant Gold ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை விவோ இந்தியாவின் இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் வாங்கலாம். ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் இதில் கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்குகிறது. இதில் HDFC வங்கி டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,500 பிளாட் கேஷ்பேக் வசதியும் அடங்கும்.

Vivo Y36: இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

Vivo Y36 ஆனது 90Hz புதுப்பிப்பு வீதம் (ரெஃப்ரெஷ் ரேட்) மற்றும் 240Hz தொடு மாதிரி வீதத்துடன் (டச் ஸேம்ப்ளிங் ரேட்) 6.64-இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே கொண்ட ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட அதன் Funtouch OS 13 உங்களுக்கு அழகான மற்றும் மென்மையான பயனர் அனுபவத்தை வழங்கும். ஹூட்டின் கீழ், சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 SoC, 8ஜிபி ரேம் மற்றும் விரிவாக்கக்கூடிய ரேம் ஆகியவை கிடைக்கும். 

மேலும் படிக்க | ஏர்டெல்லின் அசத்தல் ஆபர்! Hotstar உட்பட 15 OTT-கள் இலவசம்!

Vivo Y36: இந்த ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் என்ன?

Vivo Y36 ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.8 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே ஷூட்டர் ஆகியவை அடங்கும். இதன் மூலம் நீங்கள் தனித்துவமான புகைப்பட அனுபவத்தைப் பெறுவீர்கள். செல்ஃபிக்களை எடுக்க,  ஸ்மார்ட்போன் f/2.0 துளை கொண்ட 16 மெகாபிக்சல் முன் கேமராவை இந்த போன் கொண்டுள்ளது. இதனுடன், இந்த கேமரா அமைப்பு சூப்பர் நைட் மோட், மல்டி ஸ்டைல் ​​போர்ட்ரெய்ட் மற்றும் பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் போன்ற பல்வேறு புகைப்பட முறைகளையும் ஆதரிக்கிறது.

Vivo Y36: இந்த ஸ்மார்ட்போனி பேட்டரி விவரங்கள்

Vivo Y36 சிறந்த பேட்டரியைக் கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் ஆகியுள்ளது. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோவின் தனியுரிம வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இதன் உதவியுடன் 15 நிமிடங்களில் உங்கள் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 30% வரை சார்ஜ் செய்யலாம்.

கூடுதல் தகவல்:

விவோ அதன் விவோ வி29 (Vivo V29) தொடரை மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் Vivo V29 Lite ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. Vivo V29 GCF ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இது உலகளாவிய வெளியீட்டிற்கு தேவையான சான்றிதழாகும். வரும் வாரங்களில் V29 அறிமுகமாகும் என்பதை இந்த செய்தி உறுதியாகக் குறிக்கிறது.

மேலும் படிக்க | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M34 5G: விரைவில் அறிமுகம், விவரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News