Valentine's Day 2023: காதலர் தினத்தில் கலக்கல் ஆஃபர்: பிளிப்கார்ட்டில் இலவச மூவி டிக்கெட்கள்!!

Valentine's Day 2023: காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2023, 01:12 PM IST
  • இந்த ஆஃபர் தொடங்கப்பட்டு விட்டது.
  • பிப்ரவரி 14 இரவு வரை இந்த சலுகை இருக்கும்.
  • கூப்பனைப் பெற்ற பிறகு, ஏப்ரல் 30 வரை அதைப் பயன்படுத்தலாம்.
Valentine's Day 2023: காதலர் தினத்தில் கலக்கல் ஆஃபர்: பிளிப்கார்ட்டில் இலவச மூவி டிக்கெட்கள்!! title=

காதலர் தினம்: காதலர் வாரம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படும் காதலர் வாரத்தில், காதலர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் காதலர் / காதலி எதிர்பாராத, தனித்துவமான, வித்தியாசமான பரிசுகளை வழங்கவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. 

அப்படிப்பட்ட ஒரு சலுகையை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை பற்றி தெரிந்தால், உங்கள் முகத்திலும் கண்டிப்பாக புன்னகை பூக்கும். அப்படி ஒரு சலுகையை ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட் கொண்டுவந்துள்ளது. பிளிப்கார்ட் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் பயனர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகிறது. எனினும் இதில் நினைவில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

இலவச திரைப்பட டிக்கெட்டுகள்

இலவச திரைப்பட டிக்கெட்டுகளைப் பெற ஒரு தந்திரம் உள்ளது. இலவச திரைப்பட டிக்கெட்டுக்கு தகுதி பெற நீங்கள் ரூ.800 மதிப்பிலான பொருட்களை வாங்க வேண்டும். ரொமான்ஸ் மன்னன் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பிளிப்கார்ட்டின் இந்த புதிய சலுகை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் பிளான், அள்ளித்தரும் BSNL

இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. நீங்கள் இந்த படத்தை இன்னும் பார்க்காமல் இருந்து, இப்போது பார்க்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

இலவச திரைப்பட டிக்கெட்டை பெறுவதற்கான வழி

நீங்கள் இரண்டு திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாகப் பெற விரும்பினால், ரூ.800 மதிப்புள்ள தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), அழகு பராமரிப்பு (பியூட்டி கேர்) அல்லது சாக்லேட் வாங்க வேண்டும். இலவச டிக்கெட்டுகளை பெற, பயனர்கள் 800 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

91Mobiles இன் அறிக்கையின்படி, திங்கள் முதல் வியாழன் வரையிலான அனைத்து காட்சிகளுக்கும், வெள்ளி முதல் ஞாயிறு வரை காலைக் காட்சிகளுக்கும் டிக்கெட் கிடைக்கும். இந்த ஆஃபர் தொடங்கப்பட்டு விட்டது. பிப்ரவரி 14 இரவு வரை இந்த சலுகை இருக்கும். கூப்பனைப் பெற்ற பிறகு, ஏப்ரல் 30 வரை அதைப் பயன்படுத்தலாம்.

வவுச்சரை பெறுவது எப்படி?

பிளிப்கார்ட்டிலிருந்து ரூ.800 மதிப்பிலான ஷாப்பிங் செய்த பிறகு, மின்னஞ்சல் (ஈ-மெயில்) அல்லது குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் டெலிவரி வவுச்சரைப் பெறுவீர்கள். கூப்பனைக் கீறி, வவுச்சரை அணுக இணையதளத்தைப் பார்வையிடவும். உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்களில் சிலவற்றை நீங்கள் அங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். சமர்ப்பித்த பிறகு, 24 மணிநேரத்திற்குள் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவீர்கள். அதன் பிறகு நீங்கள் 2 இலவச டிக்கெட்டுகளைப் பெற தகுதியடைவீர்கள்.

மேலும் படிக்க | இந்தியாவிற்கும் வந்தது ட்விட்டர் ப்ளூ டிக்! மாதம் எவ்வளவு தொகை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News