Used Cars: நம்ப முடியாத விலையில் கார்களின் விற்பனை, விவரம் இதோ

Used Cars: பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான பல ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் சில கார்களின் தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2022, 06:44 PM IST
  • மலிவு விலை காரணமாக பலர் பயன்படுத்திய கார்களை வாங்க விரும்புகிறார்கள்.
  • நமது நாட்டில் பயன்படுத்திய கார்களின் சந்தை மிகப்பெரியதாக உள்ளது.
  • இந்த கார்கள் 10 ஆகஸ்ட் 2022 அன்று மாருதி சுஸுகி ட்ரூ வேல்யூ இணையதளத்தில் காணப்பட்டன.
Used Cars: நம்ப முடியாத விலையில் கார்களின் விற்பனை, விவரம் இதோ title=

மலிவான பயன்படுத்திய கார்கள்: மலிவு விலை காரணமாக பலர் பயன்படுத்திய கார்களை வாங்க விரும்புகிறார்கள். நமது நாட்டில் பயன்படுத்திய கார்களின் சந்தை மிகப்பெரியதாக உள்ளது. ஒருவர் பயன்படுத்திய காரை வாங்கும்போதெல்லாம், அவர் பல ஆப்ஷன்களை பற்றி யோசிக்கிறார். பல இடங்களில் இதை பற்றி விசாரித்து, ஆராய்ந்து பின்னர் சரியான காரை வாங்க முயற்சிக்கிறார். நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான பல ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் சில கார்களின் தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த கார்கள் 10 ஆகஸ்ட் 2022 அன்று மாருதி சுஸுகி ட்ரூ வேல்யூ இணையதளத்தில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட கார்கள் ஆகும். இவை விற்பனைக்காக டெல்லியில் உள்ளன. இந்த கார்களுக்கு 6 மாத வாரண்டி மற்றும் மூன்று இலவச சர்வீஸ்களும் வழங்கப்படுகின்றன.

Alto K10 LXI:

Alto K10 LXI- இன் விலை ₹ 345000 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2017 மாடல் ஆகும். இது 50674 கிமீ ஓடியுள்ளது. காரில் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டுள்ளது. இது தற்போது முதல் உரிமையாளர் கார் ஆக உள்ளது. இது டெல்லியில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன் பதிவு எண்ணும் டெல்லியினுடையது. 

மேலும் படிக்க | இந்தியாவின் ஆடம்பர மின்சார கார்கள்! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை 

Wagon R VXI 

வேகன் ஆர் விஎக்ஸ்ஐயின் விலை ₹ 365000 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2016 மாடல் ஆகும். இது 64574 கிமீ ஓடியுள்ளது. காரில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது தற்போது முதல் உரிமையாளர் கார் ஆக உள்ளது. இது டெல்லியில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. அதன் எண்ணும் டெல்லி எண்ணாகும்.

Alto K10 VXI 

Alto K10 VXI இன் விலை ₹ 315000 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2016 மாடல் ஆகும். இது 38000 கிமீ ஓடியுள்ளது. இது ஒரு பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். இது தற்போது முதல் உரிமையாளர் கார் ஆக உள்ளது. இதுவும் டெல்லியில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் எண்ணும் டெல்லி பதிவு எண்ணாகும். 

Wagon R LXI 

வேகன் ஆர் எல்எக்ஸ்ஐயின் விலை ₹ 310000 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கார் 2015 மாடல் கார் ஆகும். இந்த கார் 57159 கிமீ ஓடியுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜினும் உள்ளது. இந்த கார் தற்போது முதல் உரிமையாளராக உள்ளது. இது டெல்லியில் விற்பனைக்கு உள்ளது. அதன் எண்ணும் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் ஆகிறது ஓலாவின் புதிய மின்சார ஸ்கூட்டர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News