Upcoming SUVs: இன்னும் சில மாதங்களில் ஹுண்டாய் மற்றும் கியா அறிமுகம் செய்யவுள்ள கார்கள்

Upcoming Cars:  ஹூண்டாய் புதிய மைக்ரோ எஸ்யூவி பிரிவில் நுழையும். ​​கியா அதன் தற்போதைய எஸ்யூவி -களான சோனெட் மற்றும் செல்டோஸுக்கு ஃபேஸ்லிஃப்ட் மேம்படுத்தல்களை வழங்கப் போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2023, 05:07 PM IST
  • ஹூண்டாய் நிறுவனம் பிப்ரவரி 2024 -க்குள் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை நாட்டில் அறிமுகப்படுத்தும்.
  • இது உலகளாவிய மாடலில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.
  • இந்தியா-ஸ்பெக் மாற்றங்களையும் பெறும்.
Upcoming SUVs: இன்னும் சில மாதங்களில் ஹுண்டாய் மற்றும் கியா அறிமுகம் செய்யவுள்ள கார்கள் title=

ஹூண்டாய் மற்றும் கியாவின் புதிய எஸ்யூவிகள்: தென் கொரிய வாகன உற்பத்தியாளர்களான ஹூண்டாய் மற்றும் கியா விரைவில் இந்திய சந்தையில் பல புதிய பயன்பாட்டு வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன. ஹூண்டாய் புதிய மைக்ரோ எஸ்யூவி பிரிவில் நுழையும். ​​கியா அதன் தற்போதைய எஸ்யூவி -களான சோனெட் மற்றும் செல்டோஸுக்கு ஃபேஸ்லிஃப்ட் மேம்படுத்தல்களை வழங்கப் போகிறது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டை கியா ஜூலை 2023 இல் நாட்டில் அறிமுகப்படுத்தும். இந்தியா-ஸ்பெக் மாடலில் டைகர் நோஸ் க்ரில் மற்றும் புதிய எல்இடி டிஆர்எல் -களுடன் புதிய முன் பகுதி இந்த காரில் கிடைக்கும். புதிய கியா செல்டோஸ் முற்றிலும் புதிய உட்புறத்தைக் கொண்டிருக்கும். புதிய டேஷ்போர்டு தளவமைப்புடன் இணைக்கப்பட்ட திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் கருவி கன்சோலுடன் இது இருக்கும். இதனுடன், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பும் இதில் கிடைக்கும். 

புதிய மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் 160PS மற்றும் 253Nm டார்க்கை உருவாக்கும். இதனுடன், தற்போதுள்ள 1.5L NA பெட்ரோல் மற்றும் 1.5L டர்போ டீசல் இன்ஜின்கள் தொடர்ந்து இதில் கிடைக்கும்.

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்

கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்டை இந்திய சாலைகளில் சோதிக்கத் தொடங்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட உட்புறத்தை இது கொண்டிருக்கும். இது புதிய செல்டோஸால் ஈர்க்கப்பட்ட ஸ்டைலிங்குடன் புதிய முன் மற்றும் பின்புற தோற்றத்தைப் பெறும். இந்த கார் புதிய தொடுதிரை (டச்ஸ்க்ரீன்) மற்றும் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோலுடன் முற்றிலும் புதிய உட்புறத்தைக் கொண்டிருக்கும். இது புதிய 16 இன்ச் அலாய் வீல்களையும் பெறும். இருப்பினும், அதன் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இருக்காது.

மேலும் படிக்க | உங்களிடம் கார் உள்ளதா? இந்த பார்க்கிங் டிப்ஸ் மிக உதவியாக இருக்கும்

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் மோட்டார் அதன் புதிய Xtor உடன் ஜூலை 10, 2023 அன்று மைக்ரோ SUV பிரிவில் நுழையும். இந்த கார் நிறுவனத்தின் K1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். அதுல் Grand i10 Nios ஐ அடிப்படையாகக் கொண்டது. 3-ஸ்போக் மல்டி-ஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ்-கமாண்டட் எலக்ட்ரிக் சன்ரூஃப், செக்மென்ட்-ஃபர்ஸ்ட் டேஷ்கேம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி போன்ற அம்சங்கள் இந்த காரில் கிடைக்கும். 

இது 1.2L பெட்ரோல் எஞ்சின் பெறும், இது 82bhp மற்றும் 114Nm அவுட்புட்டை உருவாக்கும். இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆப்ஷனைப் பெறும். இதனுடன், சிஎன்ஜி விருப்பமும் இதில் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனம் பிப்ரவரி 2024 -க்குள் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை நாட்டில் அறிமுகப்படுத்தும். இந்த எஸ்யுவி உலகளாவிய மாடலில் இருந்து வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்தியாவுக்கான பிரத்யேகமான இந்தியா-ஸ்பெக் மாற்றங்களும் இதில் கிடைக்கும். புதுப்பிக்கப்பட்ட மாடல் புதிய வெர்னாவால் ஈர்க்கப்பட்ட ஸ்டைலிங்குடன் புதிய முன்பகுதியைப் பெற வாய்ப்புள்ளது. இது பாராமெட்ரிக் பேட்டர்னுடன் கூடிய அகலமான கிரில், ஸ்பிலிட் செட்டப் மற்றும் எச்-ஸ்டைல் ​​டிஆர்எல்களுடன் கூடிய ஹெட்லேம்ப்கள், கூர்மையான டெயில்-லேம்ப்களுடன் கூடிய புதிய டெயில்கேட் மற்றும் திருத்தப்பட்ட பூட் லிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

இதனுடன், ADAS தொழில்நுட்பத்துடன் கூடிய பல பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கும். இது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் விருப்பத்தை பெறும்.

மேலும் படிக்க | Mahindra Thar: ஜூன் மாதம் அதிரடி தள்ளுபடிகள்: குஷியில் வாடிக்கையாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News