Flipkart Big Bachat Sale: நம்ப முடியாத விலையில் iPhone 15.... அள்ளிச்செல்லும் கஸ்டமர்ஸ்

Flipkart Big Bachat Sale: ஐபோன் 15 -க்கு இந்த விற்பனையில் ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், இந்த போன் இப்போது முன்பை விட மலிவு விலையில் கிடைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2024, 11:53 AM IST
  • Flipkart இன் Big Saving Days விற்பனையில், iPhone 15 இன் விலை இப்போது 58,999 ரூபாயாக குறைந்துள்ளது.
  • நிறுவனம் Flipkart UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி வழங்குகிறது.
  • Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம், வாடிக்கையாளர்கள் போனில் 5% வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
Flipkart Big Bachat Sale: நம்ப முடியாத விலையில் iPhone 15.... அள்ளிச்செல்லும் கஸ்டமர்ஸ் title=

Flipkart Big Bachat Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட்டில் தற்போது ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. இதில் ஐபோன் 15 இன் விலையில் மீண்டும் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த பிளிப்கார்ட் சேல் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 

iPhone 15 Offer

ஐபோன் 15 -க்கு இந்த விற்பனையில் ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், இந்த போன் இப்போது முன்பை விட மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த சிறந்த டீலை பற்றி இங்கே காணலாம்.

iPhone 15: பிளிப்கார்ட்டில் தள்ளுபடி சலுகை

Flipkart இன் Big Saving Days விற்பனையில், iPhone 15 இன் விலை இப்போது 58,999 ரூபாயாக குறைந்துள்ளது. அதாவது, வெளியீட்டு விலையைப் பார்த்தால், இந்த தொலைபேசியில் தற்போது ரூ.20 ஆயிரத்திற்கு மேல் நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. நிறுவனம் ரூ.79,900 என்ற விலையில் தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது இந்த தொலைபேசி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. நிறுவனம் Flipkart UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி வழங்குகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம், வாடிக்கையாளர்கள் போனில் 5% வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, மாதத்திற்கு ரூ.3,653 என்ற எளிதான EMI-யிலும் போனை வாங்கலாம்.

மேலும் படிக்க | எதையும் டெலிட் செய்யாமல் Storage Clear பண்ணலாம்! எப்படி தெரியுமா?

iPhone 15: அற்புதமான பரிமாற்றச் சலுகை

நீங்கள் ஐபோன் 15 ஐ இன்னும் மலிவாக வாங்க விரும்பினால், இதில் கிடைக்கும் பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொலைபேசியின் விலையை கணிசமாகக் குறைக்கிறது. ஐபோன் 13ஐ மாற்றினால் ரூ.24 ஆயிரம் நேரடி தள்ளுபடியைப் பெறலாம். இது இந்த ஸ்மார்ட்போன் டீலை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இது தவிர, எந்த வித ஆண்ட்ராய்டு போனையும் எக்ஸ்சேஞ்ச் செய்து அதற்கேற்ற நல்ல மதிப்பைப் பெறலாம். ஆனால், பரிமாற்ற சலுகையின் மதிப்பு உங்கள் பழைய போனின் நிலையைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 15: சிறப்பம்சங்கள்

ஐபோன் 15, ஐபோன் 14 மாடல்களில் பெரிய மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல வாடிக்கையாளர்களை ஈர்த்தது. ஐபோன் 15 உடன், ஆப்பிள் புதிய கிளாஸ் பேக் வடிவமைப்பை புதிய வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் டிஸ்ப்ளேவின் மேல் ஒரு டைனமிக் ஐலேண்டையும் வழங்குகிறது. ஐபோன் 15 இல் A16 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது முதன்மை செயல்திறனை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு கேமராவுடன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இது நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது. ஆப்பிளின் AI அம்சங்கள் இந்த போனில் இல்லை என்றாலும், மிக குறைந்த விலையில் அதிக நவீன அம்சங்கள் கிடைப்பதால் இதை இந்த சலுகை விற்பனையில் வாங்குவது லாபகரமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | ஐபோன் முதல் சாம்சங் வரை... உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் எவை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News