Uber tips and tricks: தீபாவளி அன்று பயணம் செய்கிறீர்களா? - இதை நினைவில் கொள்ளுங்கள்

தீபாவளியை முன்னிட்டு நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு ஊபர் மூலம் பயணிக்கிறீர்களா, பாதுகாப்பாக செல்வது குறித்து குறிப்புகளை அறிந்துகொள்ளுங்கள்.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 20, 2022, 11:03 PM IST
  • ஊபரில் நீங்கள் பயணம் செய்யும் இடத்தை உங்களுக்கான நம்பகமான தொடர்புகளுக்கு அனுப்பலாம்.
  • 5 தொடர்புகளை ஊபரில் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
Uber tips and tricks: தீபாவளி அன்று பயணம் செய்கிறீர்களா? - இதை நினைவில் கொள்ளுங்கள் title=

ஊபர் மற்றும் ஓலா சேவைகள் ஆகியவை இந்த நாட்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஸ் அடிப்படையிலான கேப் சேவைகளாகும். அவர்கள் நமது பயணத்தை மிகவும் வசதியாக மாற்றியுள்ளனர், இருப்பினும், பண்டிகைகளின்போது, அதில் பயணம் செய்வது சிக்கலுக்குரியதாகவே இருக்கும். 

எனவே, குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, அதில் பயணம் செய்யும்போது, அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும், இந்த தீபாவளிக்கு நீங்கள் ஊபரில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

'நம்பகமான தொடர்புகள்' (Trusted Contacts) பட்டியலை அமைக்கவும், அந்த தொடர்புகளிடம் நீங்கள் விரும்பும்போது உங்கள் பயணம் குறித்த விவரங்களைப் பகிரவும் ஊபர் அனுமதிக்கிறது. நம்பகமான தொடர்புகளை அமைப்பதற்கான வழிகள், இதோ... 

ஊபரில் உங்களின் பயணத்தைப் பகிர்வது எப்படி?

- நீங்கள் ஏற்கனவே பயணத்தின் நடுவில் இருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ஊபரில் 'Share my Trip' அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய படிகள் கீழ்வருமாறு:

- ஊபர் ஆஃப்பை (ஆண்ட்ராய்டு, iOS) திறந்து,  முகப்புத் பக்கத்தில் மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

- இப்போது "Share Trip Status" ஆஃப்ஷனைத் தேர்வு செய்யவும்.

- நீங்கள் இருக்கும் இடத்தை. பகிர உங்களின் ‘நம்பகமான தொடர்புகள்’ பட்டியலில் இருக்கும் தொடர்புகளையும் தேர்ந்தெடுக்கவும். பட்டியலில் இருந்து மொத்தம் 5 தொடர்புகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.

- தேர்வு செய்து முடிந்ததும், நீங்கள் தேர்ந்தெடுத்த நம்பகமான தொடர்புகள் டிரைவரின் பெயர், வாகனம் குறித்த தகவல் மற்றும் Live Location ஆகியவற்றை காண்பிக்கும்.

மேலும் படிக்க | எப்படி இருக்கிறது ஓப்போ Foldable ஃபோன் - வெளியான தகவல்கள்

Uber

நீங்கள் உங்கள் ஆஃப்பில்,‘நம்பகமான தொடர்புகள்’ எதையும் சேர்க்கவில்லை என்றால், இப்போது அவற்றைச் சேர்க்க இந்தப் படிகளைப் பின்பற்றலாம்.

- ஊபர் ஆஃப்பில் "Settings" பகுதிக்குச் செல்லவும்.

- இப்போது "Manage Trusted Contacts" ஆப்ஷனை தேர்வுசெய்து, நம்பகமான தொடர்புகளைச் சேர் என்பதைத் கிளிக் செய்யவும்.  

- உங்கள் தொடர்பு பட்டியலில் இருந்து இந்த தொடர்புகளின் பெயர்களை தேர்வுசெய்யும்.

- முடிந்ததும், "Don’t remind me, I’ll share my trips manually”, “Remind me at night (9pm to 6am) or “Remind me before every trip”" என்ற மூன்று விருப்பங்களிலிருந்து நீங்கள் ஒன்றை தேர்வு செய்யலாம்.

- இது தவிர, ஊபர் வாடிக்கையாளர்கள் தனது பயண இடத்தை தங்களுக்கு வேண்டியவர்களுடன் WhatsApp அல்லது SMS மூலம் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. நீங்கள் பயணம் செய்யும்போது, முகப்புத் திரையில் "Send Status" விருப்பத்தை டைமிங் செட் செய்து பயண நிலையை அடைய வேண்டும். அவர்களுக்கு Link வடிவத்தில் தகவல் அனுப்பப்படும்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தட்கல் டிக்கெட்டுகளை உறுதிசெய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News