வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற தொலைபேசி சேவை வழங்க தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நாள்தோறும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ட்ராய் எச்சரித்துள்ளது.
தொழில் போட்டி காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு, மற்ற நிறுவனம் உரிய சேவையை வழங்குவதில்லை என்ற புகார் வந்தவண்ணம் உள்ளது.
அதாவது வட இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர், தென் இந்தியாவில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள விரும்பும் போது, இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை சரியாக அமையும் பட்சத்தில் தான் வாடிக்கையாளர்கள் சிறந்த சேவையை பெற முடியும். இரு நிறுவனமும் சரியான நெட்வொர்க் இணைப்பில் இருப்பது அவசியம். அப்பொழுது தான் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்கனெக்சன் வசதியை வழங்க முடியும்.
ஆனால் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள், தனக்கு போட்டியாக இருக்கும் மற்ற நிறுவனத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஆனால் தொழில் போட்டியால் இந்த சேவையை சரியான முறையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒருவரையொருவர் குற்றம்ச்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இன்றி சேவை கிடைத்திட ட்ராய் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
@TRAI releases Consultation Paper on "Inputs for Formulation of National Telecom Policy - 2018"https://t.co/LcMWp5smkT pic.twitter.com/U7ApX0JDMv
— TRAI (@TRAI) January 3, 2018
அதாவது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்கனெக்சன் வழங்குவதற்கான காலக்கெடுவை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்துள்ளது. இந்த 30 நாட்களுக்குள் ஒரு நிறுவனத்தின் கோரிக்கையை மற்றொரு நிறுவனம் பரிசீலித்து தேவையான வசதியை செய்து தரவேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களை எச்சரித்துள்ளது.