இஸ்ரோ மையத்தில் நடந்த புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி! வீடியோ

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கடைசி கூட்டத்தில், செயற்கைக்கோள் மைய இயக்குனர் புல்லாங்குழல் வாசித்து நிறைவு செய்தார்.

Last Updated : Dec 31, 2019, 01:23 PM IST
இஸ்ரோ மையத்தில் நடந்த புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி! வீடியோ title=

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கடைசி கூட்டத்தில், செயற்கைக்கோள் மைய இயக்குனர் புல்லாங்குழல் வாசித்து நிறைவு செய்தார்.

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் கடைசி கூட்டம் நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், யூ.ஆர் ராவ் செயற்கைக் கோள் மைய இயக்குநரும், புல்லாங்குழல் கலைஞருமான குனிகிருஷ்ணனும் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் இறுதியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் மைய இயக்குனர் பி குன்ஹிகிருஷ்ணன் ஒரு திறமையான விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு புல்லாங்குழல் வித்வான் கூட. பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு  கூட்டத்தில் அவர் இனிமையான வாத்தாபி கணபதிம் பாஜே என்று பாடலை புல்லாங்குழலில் வாசித்தார்.

குன்ஹிகிருஷ்ணனின் இந்த சிறந்த புல்லாங்குழல் வாசிப்பு வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ டி விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

 

 

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News