வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு 'தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது' ('Temporarily Banned') என்ற மெசேஜ் வரலாம். இந்த இன்-ஆப் மெசேஜ் (in-app message) வருவதற்கு காரணம் தெரியுமா? வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பஹை தெரிந்துக் கொள்வோம்.
இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கு வாட்ஸ்அப்பில் வந்தால், அதன் பொருள், நீங்கள் அதிகாரப்பூர்வ WhatsApp செயலிக்கு பதிலாக WhatsApp இன் ஆதரிக்கப்படாத பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும்.
அப்போது தற்காலிகமாக உங்கள் WhatsApp செயலி தடை செய்யப்படும். அதன் பிறகும், நீங்கள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு மாறவில்லை என்றால், உங்கள் கணக்கு WhatsApp ஐப் பயன்படுத்துவதிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்படலாம் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும், ஒருவர் அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டிற்கு மாறும் வாய்ப்பும் இருப்பதால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சரியான செயலியை பதிவிறக்கம் செய்தால் ஒருவர் நிரந்தரமாக WhatsApp ஐப் பயன்படுத்த தடை விதிக்கப்படாது.
Read Also | அதிர்ச்சி கொடுத்த WhatsApp, 22 லட்சம் கணக்குகள் Ban
வாட்ஸ்அப் பயனர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus), ஜிபி வாட்ஸ்அப் (GB WhatsApp) ஆகியவை ஆதரிக்கப்படாத வாட்ஸ்அப் செயலிகள் ஆகும். வாட்ஸ்அப்பின் மாற்றப்பட்ட பதிப்புகள். இந்த அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டவை, இவை வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறுபவை. WhatsApp இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த மூன்றாம் தரப்பு செயலிகளை WhatsApp ஆதரிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் அதிகாரப்பூர்வ WhatsApp செயலிக்கு மாற முயற்சித்தால் அதற்கு முன்னதாக உங்கள் உரையாடல் வரலாற்றை (back up your chat history) காப்புப் பிரதி எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், ஒருவர் பயன்படுத்தும் தவறான வாட்ஸ் அப் செயலியின் பெயர் தான், உங்கள் உரையாடல் வரலாற்றை மாற்ற வேண்டுமா என்பதை தீர்மானிம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் நீங்கள், More Options > Settings > Help > App info என்ற தெரிவுக்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் செயலியின் பெயரைக் கண்டறிய வேண்டும். வாட்ஸ்அப் பிளஸ் அல்லது ஜிபி வாட்ஸ்அப்பைத் தவிர வேறொரு செயலியை நீங்கள் பயன்படுத்தினால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்குவதற்கு முன்னதாக உரையாடல் வரலாற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
Read Also | Android பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த செயலிகள் உங்களை மோசடியில் சிக்க வைக்கலாம்
ஒருவர் ஜிபி வாட்ஸ்அப் (GB WhatsApp) பயன்படுத்தினால், இதுவரை செய்த உரையாடலை சேமிக்கவும் மாற்றவும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை:
Step 1: உங்கள் தற்காலிக தடை முடிவடையும் வரை காத்திருங்கள். தடை எப்போது வரை என்பதை டைமர் உங்களுக்குக் காண்பிக்கும்.
Step 2: ஜிபி வாட்ஸ்அப்பில், More options > Chats > Back up chats என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
Step 3: அடுத்து, Phone Settings > tap Storage > Files என்ற தெரிவுக்கு செல்லவும்
Step 4: ஜிபி வாட்ஸ்அப் போல்டரை (folder) கண்டுபிடித்து, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
Step 5: மேல் வலது மூலையில் More > Rename என்பதை சொடுக்கி, அந்த போல்டருக்கு "WhatsApp" என பெயரிடவும்.
Step 6: Play Storeக்குச் சென்று அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டைப் பதிவிறக்கவும். உங்களால் ப்ளே ஸ்டோரை அணுக முடியவில்லை எனில், செயலியை பதிவிறக்கவும்.
Step 7: வாட்ஸ்அப்பில், உங்கள் ஃபோன் எண்ணைச் சரிபார்க்கவும்.
Step 8: காப்புப்பிரதி (Backup) எடுத்த்ப் பிறகு Restore > Next என்ற தெரிவை சொடுக்கவும்.
Step 9: தற்போது, உங்கள் உரையாடல்கள் WhatsAppஇல் சேமிக்கப்படும்.
WhatsApp Plus விஷயத்தில், உரையாடல் வரலாறு முன்னதாகவே சேமிக்கப்பட்டிருந்தால், அது தானாகவே அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டிற்கு மாறிவிடும்.
Read Also | இனி Google Driveஇல் ஆவணங்களை தேடுவது மிகவும் சுலபம்! புது அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR