இந்தியாவில் மீண்டும் வருகிறது TikTok

தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி இந்தியாவில் மீண்டும் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2022, 10:15 AM IST
  • டிக்டாக் செயலி மீண்டும் வருகிறது
  • இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
  • விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
இந்தியாவில் மீண்டும் வருகிறது TikTok  title=

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு திடீரென 2020 ஆம் ஆண்டு தடை விதித்தது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறியதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. மேலும், சீன செயலிகள் தனிநபர் பாதுகாப்பு தகவல்களை திருடுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த விசாரணையில் இறங்கிய மத்திய அரசு, டிக்டாக் மட்டுமின்றி சீனாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிய 100க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது.

மேலும் படிக்க | கூகுளுடன் டீல் பேசும் ஷேர் சாட் - எதுக்கு தெரியுமா?

ஆனால், டிக்டாக் நிறுவனம் மட்டும் மீண்டும் இந்தியாவில் தனது பயன்பாட்டை தொடங்க தீவிர முயற்சிகளை எடுத்துக் கொண்டே வருகிறது. தனிநபர் தகவல் சேமிப்பு உள்ளிட்டவைகளை இந்தியாவைக் கடந்து வேறு நாடுகளில் சேமிக்கப்படுவதை கட்டாயம் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது. பைட்டான்ஸின் டிக்டாக் செயலி, இதற்கு முன்பு செயலியை பயன்படுத்துவபவர்களின் தகவல்களை வேறு ஒரு நாட்டில் இருக்கும் நிறுவனத்திடம் கொடுத்து சேமித்து வந்தது. இது சைபர் செக்ரியூட்டியில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக் கருதிய மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

டிக்டாக் நிறுவனமும் இந்த விஷயத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் இந்தியாவில் சேவையை தொடங்க முயன்றது. ஆனால், எதுவும் சரியாக அமையாத நிலையில் புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளது. தகவல் சேமிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்காக மும்பையை தலைமையிடமாகக்கொண்ட Yotta Infrastructure Solutions-ன் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இரு நிறுவனங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் இந்த டீல் முடிவுக்கு வரும்பட்சத்தில் அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இதுகுறித்து பேசிய மூத்த அரசு அதிகாரி ஒருவர், இரு நிறுவனங்களின் திட்டம் குறித்து தெரிவிக்கபட்டுள்ளதாகவும், அனுமதி கேட்கும்பட்சத்தில் முறையாக பரிசீலனை செய்து அனுமதி வழங்குவது முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தரவு சேமிப்பு கொள்கையில் மத்திய அரசின் விதிமுறைகளை கட்டாயம் ஏற்றுக்கொண்டால் அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | YouTube: இந்தியாவில் 2002ஆம் ஆண்டின் 3 மாதங்களில் 11 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News