Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே

OnePlus தனது முதன்மை 'OnePlus 9' தொடரை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இதில் OnePlus 9 ப்ரோவும் இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2020, 02:58 PM IST
  • OnePlus தனது முதன்மை 'OnePlus 9' தொடரை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தக்கூடும்.
  • OnePlus 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப் படலாம்.
  • OnePlus 9 லைட் ஸ்னாப்டிராகன் 865 ஆல் இயக்கப்படும்.
Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே title=

OnePlus மிகவும் பிரபலமான, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு பிராண்டாகும். OnePlus தனது முதன்மை 'OnePlus 9' தொடரை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இதில் OnePlus 9 ப்ரோவும் இருக்கும்.

இரண்டு தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்படும்

இப்போது ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 9 லைட்டும் (OnePlus 9 Lite) இவற்றுடன் அறிமுகப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு சென்ட்ரல் அறிக்கையின்படி, OnePlus 9 lite-ல் உள்ள பல அம்சங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 8T போலவே இருக்கும். அதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

வயர்லெஸ் சார்ஜிங்

இது 90 ஹெர்ட்ஸ் அல்லது 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 8T ஐப் போலவே குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. OnePlus 9 மற்றும் OnePlus 9 pro, குவால்காமின் சமீபத்திய 5NM சிப்செட் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 உடன் அறிமுகப்படுத்தப்படும்.

ஆனால் OnePlus 9 லைட் அதற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 865 ஆல் இயக்கப்படும். அந்த அறிக்கையின்படி, அதன் பேக் கவர் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும். தொலைபேசியில் வயர்லெஸ் சார்ஜிங்கின் (Wireless Charging) வசதியும் இருக்கும்.

ALSO READ: WhatsApp விரைவில் கொண்டு வருகிறது Multi Device Support.. அதன் சிறப்பு அம்சம் என்ன..!!

லெமனேட்

OnePlus 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப் படலாம். தற்போது நிறுவனத்திடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இன்னும் வரவில்லை. வரவிருக்கும் OnePlus ஸ்மார்ட்போனின் மாடல் எண்ணின் முதல் இரண்டு எழுத்துக்களின் குறியீட்டு பெயர் Lemonade ஆகும். டிப்ஸ்டர் மேக்ஸ் ஜே மூலம் இந்த ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

OnePlus ஸ்மார்ட்போன்

OnePlus-ன் இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) IP68 மதிப்பீடு, NFC, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்படலாம். OnePlus-ன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 65W வயர்டு சார்ஜிங்குடன் அறிமுகமாகக் கூடும் என்றும் கூறப்படுகின்றது. 

ALSO READ: இனி Chatting செய்வதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செயலாம்; IRCTC-ன் புதிய அப்டேட்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News