புத்தாண்டில் ஷாக் கொடுத்த கார் நிறுவனங்கள்: இந்த கார்களின் விலைகள் அதிகரித்தன

இன்று முதல் பல நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 04:12 PM IST
  • வால்வோ, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஆடி உள்ளிட்ட பல நிறுவனங்களின் வாகனங்கள் விலை உயர்ந்துள்ளன.
  • எக்ஸ்சி60 பி5 இன்ஸ்கிரிப்ஷன் எஸ்யூவியின் (எஸ்யூவி) விலை ரூ.1.6 லட்சம் அதிகரித்து ரூ.63.5 லட்சமாக இருக்கும்.
  • டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இன்று முதல் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
புத்தாண்டில் ஷாக் கொடுத்த கார் நிறுவனங்கள்: இந்த கார்களின் விலைகள் அதிகரித்தன title=

கார்களின் விலை உயர்வு: நாட்டில் 2022 புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று முதல் பல நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. 

வால்வோ, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஆடி உள்ளிட்ட பல நிறுவனங்களின் வாகனங்கள் விலை உயர்ந்துள்ளன. இன்னும் சில நிறுவனங்களும் தங்கள் கார்களின் விலையை அடுத்த சில நாட்களில் அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஸ்வீடன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டு கார் (Car) தயாரிப்பு நிறுவனமான வோல்வோ, விலைவாசி உயர்வு காரணமாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் விலையை இன்று முதல் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. வால்வோ கார் இந்தியா நிறுவனம், T4R வடிவமைப்பு கொண்ட அதன் SUV XC40-ன் விலை, திருத்தப்பட்ட விலைகளின் கீழ் 2 லட்சம் ரூபாய் கூடுதலாக, 43.25 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

எக்ஸ்சி60 பி5 இன்ஸ்கிரிப்ஷன் எஸ்யூவியின் (எஸ்யூவி) விலை ரூ.1.6 லட்சம் அதிகரித்து ரூ.63.5 லட்சமாக இருக்கும். அதேபோன்று அந்நிறுவனத்தின் செடான் எஸ்90 (Sedan S90) காரின் விலை மூன்று லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் விலை ரூ.64.9 லட்சமாக இருக்கும். மறுபுறம், SUV XC90 ரூ. 1 லட்சம் அதிகரித்து ரூ.90.9 லட்சத்தில் கிடைக்கும்.

ALSO READ | Car Discounts: அசத்தல் கார்களில் அபார தள்ளுபடிகள், மிஸ் செஞ்சா வருத்தப்படுவீங்க 

செலவு அதிகரிப்பால் விலையில் அதிகரிப்பு 

விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கும் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக அன்னியச் செலாவணியில் ஏற்ற இறக்கம், உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல், தொற்றுநோய் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் வந்த கட்டுப்பாடுகள் காரணமாக, மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளது. வோல்வோ கார் இந்தியா தனது அனைத்து டீசல் மாடல்களின் உற்பத்தியையும் படிப்படியாக நிறுத்தி, பெட்ரோலில் இயங்கும் கார்களை மட்டுமே உருவாக்க முடிவெடுத்துள்ளது.

மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன

மறுபுறம், Maruti Suzuki, Tata Motors, Mercedes-Benz மற்றும் Audi ஆகிய வாகன உற்பத்தியாளர்களும் ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். உள்நாட்டு வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இன்று முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோட்டா (Toyota) கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இன்று முதல் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அதன் பல மாடல்களின் விலையை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தியுள்ளது. 

மூலப்பொருட்கள் உட்பட உள்ளீட்டு செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை திருத்தம் அவசியமானதாகிறது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, செலவு அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ | BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே... 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News