பிளிப்கார்டின் ஒரே நாள் டெலிவரி சேவை: எப்படி பெறுவது?

Flipkart Same Day Delivery: பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் டெலிவரியில் அடுத்த புரட்சியாக ஆர்டர் செய்த அன்றே பொருட்களை டெலிவரி செய்யும் அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2024, 09:45 AM IST
  • பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய நடைமுறை
  • ஆர்டர் செய்த அன்றே பொருட்கள் டெலிவரி
  • முதல் கட்டமாக 20 நகரங்களில் இந்த திட்டம் அறிமுகம்
பிளிப்கார்டின் ஒரே நாள் டெலிவரி சேவை: எப்படி பெறுவது? title=

இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் ஆர்டர் செய்த அன்றே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக ஆன்லைனில் மூலம் பொருட்கள் வாங்கும் போக்கும் மக்களிடையே அதிகிரித்திருப்பதாலும், ஆன்லைன் ஷாப்பிங் துறையில் நிறைய போட்டிகள் உருவாகியிருப்பதாலும் புதிய யுக்திகளை கையாள வேண்டிய இடத்துக்கு பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. அதன் ஒருபகுதியாக தான் இப்போது "Same Day Delivery" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது பிளிப்கார்ட். முதல் கட்டமாக பிளிப்கார்ட் இந்தியாவில் 20 நகரங்களில் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தியிருக்கிறது. 

ஒரே நாளில் டெலிவரி சாத்தியம் எப்படி என்ற கேள்வி வாடிக்கையாளர்களுக்கு எழலாம். அதற்கு விளக்கம் கொடுத்திருக்கும் பிளிப்கார்ட், பொருட்களை ஆர்டர் செய்பவர்கள் மதியம் ஒரு மணிக்குள் ஆர்டர் செய்தால் மட்டுமே ஒரே நாளில் டெலவரி செய்யப்படும் என கூறியுள்ளது. இரவு 12 மணிக்குள் ஆர்டர் செய்த பொருட்கள் வாடிக்கையாளர் கைகளுக்கு கிடைத்துவிடும்.   

மேலும் படிக்க | ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக பைக் வாங்கணுமா... இதெல்லாம் பெஸ்ட் மாடல்!

பிளிப்கார்ட் ஒரே நாள் டெலிவரி கிடைக்கும் நகரங்கள்

அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லூதியானா, லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்டில் ஆர்டர் செய்த அன்றே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். 

எவ்வளவு நேரத்துக்குள் பொருள் கிடைக்கும்?

பிளிப்கார்ட் டெலிவரி நேரம்: மதியம் 1 மணிக்குள் ஆர்டர் செய்தால், அதே நாள் இரவு 12 மணிக்குள் டெலிவரி செய்யப்படும்.

என்னென்ன பொருட்களை ஆர்டர் செய்யலாம்?

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரே நாளில் கிடைக்கும் பொருட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொபைல்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள், வாழ்க்கை முறை புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆர்டர் செய்த நாளிலேயே டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும்.

சேவையை பயன்படுத்துவது எப்படி:

- பிளிப்கார்ட் ஆப் அல்லது வலைத்தளத்தில் உள்நுழையவும்.
- "Same Day Delivery" ஐகான் தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு தேவையான பொருளை தேர்ந்தெடுத்து, "Add to Cart" என்பதைக் கிளிக் செய்யவும்.
- "Checkout" செய்யவும், "Same Day Delivery" விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் முகவரி மற்றும் கட்டண விவரங்களை சரிபார்க்கவும்.
- "Place Order" என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் அனைத்து பொருட்களுக்கும் ஒரே நாள் டெலிவரி கிடைக்காது. மதியம் 1 மணிக்கு மேல் ஆர்டர் செய்தால், அடுத்த நாள் டெலிவரி செய்யப்படும். டெலிவரி நேரம் மற்றும் கிடைக்கும் பொருட்கள் நகரத்திற்கு நகரம் மாறுபடலாம்.

மேலும் படிக்க | 5ஜி ரேஸில் குதித்த வோடபோன் ஐடியா - ஜியோ, ஏர்டெல் ஆதிக்கத்துக்கு என்டு கார்டு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News