ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் என பல தொலைதொடர்பு நிறுவனங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மறுபிரவேசத்தால் அதிர்ந்து போயுள்ளன. பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கமாக புதிய மொபைல் இணைப்பு வாங்குபவர்கள் ஜியோ நிறுவனத்தையே தேர்வு செய்வார்கள். இந்த நிலையை மாற்றியது பிஎஸ்என்எல் செய்துள்ள அதிரடி மாற்றங்கள். அதில், ஜியோவை விட்டுவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில், ஜியோவின் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிகை குறைத்துள்ளது. இந்த நிலையை மேலும் தொடர்வதற்காக, இப்போது BSNL ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.345 மட்டுமே.
இந்தத் திட்டத்தில் கிடைக்கும் டேட்டா 60 நாட்களுக்கு நீடிக்கும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இந்த திட்டம் மலிவானது. BSNL தற்போது 4G நெட்வொர்க்கை வழங்கவில்லை என்றாலும், அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 345 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.345 திட்டம் மிகவும் நல்லது என்று சொன்னால் அதற்கான காரணமும் தெரிய வேண்டும் தானே? இந்தத் திட்டத்தில் 60 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. ஒரே நாளில் 1ஜிபிக்கு மேல் டேட்டா பயன்படுத்தினால், இணையத்தின் வேகம் குறையும்.
ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் மற்ற நிறுவனங்களின் திட்டங்களில் இருந்து வேறுபட்டது. மற்ற நிறுவனங்களின் எந்தத் திட்டத்தின் வேலிடிட்டியும் 60 நாட்கள் இல்லை என்பதூ குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் திட்டத்திற்கு தினமும் ரூ.5.75 மட்டும் தான் செலவாகும். தினசரி 1ஜிபி டேட்டா கொடுத்து, 60 நாட்களுக்கு நீடிக்கும் திட்டத்தை, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா என வேறு எந்த நிறுவனமும் கொடுக்கவில்லை.
நாட்டில் தற்போது மலிவான சேவை வழங்குவது பிஎஸ்என்எல் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், 4ஜி சேவை இன்னும் இந்தியா முழுவதும் சென்றடையவில்லை என்பது மட்டும் பின்னடைவாக இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க் விரிவடைந்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் அரசு நிறுவனம் பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது. 4ஜி நெட்வொர்க்கில் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை வலுவாக இருந்தாலும் பிஎஸ்என்எல் அவற்றுடன் போட்டிபோட்டு முன்னேறி வருகிறது.
மேலும் படிக்க | அமேசனில் பண்டிகை கால சலுகை... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ