ராயல் என்ஃபீல்டு 2022 ஆம் ஆண்டில் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, இன்னும் இரண்டு நாட்களில் அதாவது மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் ஒரு புத்தம் புதிய சாகச பைக்கை அறிமுகப்படுத்துகிறது. இது ஹிமாலயன் வேரியண்டில் இருக்கும் மலிவான மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த வேரியண்டாக இருக்கும். பைக்கின் பெயர் ஸ்க்ராம் 411. இந்த ஆண்டில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்த இருக்கும் முதல் பைக் இது.
மேலும் படிக்க | Free Internet: பேஸ்புக் மூலம் இலவச Wifi கண்டுபிடிப்பது எப்படி?
இந்த பைக்கைப் பொறுத்தவரை இந்திய வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக இந்த மோட்டார் சைக்கிளுக்காக காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு இந்த பைக்கில் ஸ்பெஷல் என்னவென்றால், சாலையிலும், ஆஃப்-ரோடிங்கிலும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ராயல் என்ஃபீல்டு ஸ்க்ரம் 411-ஐ வெறும் ஆஃப்-ரோடிங்கிற்குப் பதிலாக நகர்ப்புற சாலைகளில் ஓட்டும் வகையில் வடிவமைத்துள்ளது.
வேரியண்டுகளுக்கான கலர்
சமீபத்தில், சோதனை ஓட்டங்களின்போது சாலையில் தென்பட்ட இந்த அட்வென்சர் பைக்குகள், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ண கலவையில் காணப்பட்டது. ஸ்க்ரம் 411 பைக் கடந்த காலங்களில் பலமுறை சாலைகளில் தென்பட்டிருந்தாலும், இரட்டை கலர் காம்பினேஷனில் தோன்றுவது இதுவே முதல் முறை. பைக்கின் முன்புறத்தில் 19 இன்ச் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச் சக்கரமும் உள்ளது. இந்த பைக்கின் விலை மிகவும் இதே வேரியண்டில் இருக்கும் மற்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது குறைவானதாக இருக்கும். அதாவது அதிகபட்ச விலை சுமார் ரூ.1.90 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய ஸ்க்ரம் 411 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் வேரியண்டை விட குறைவானதாக இருக்கும். ஹிமாலயன் பைக்கின் முன் பகுதியில் நீளமான கண்ணாடி, இரட்டை சீட், லக்கேஜ் ரேக், பெரிய முன் சக்கரம் உள்ளிடவை இடம்பெற்றிருக்கும். ஸ்க்ரம் 411 பைக்கை பொறுத்தவரை அந்த பைக்குகளுக்கு மாறாக சிறிய சக்கரங்கள், சிங்கிள் சிட்டிங் சீட், LS410, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC இன்ஜின் ஆகியவை இருக்கும். இதில் இருக்கும் 411 cc என்ஜின் 24.3 bhp திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR