Reliance Jio-வின் ரூ.21-க்கு 3-GB சலுகை- உள்ளே!!

ரிலையன்ஸ் ஜியோவின் நான்கு புதிய பூஸ்டர் பேக் வெறும் 21 பாய்க்கு 1 ஜிபி டேட்டா தரும் புதிய சலுகை. 

Last Updated : Jan 31, 2018, 03:28 PM IST
Reliance Jio-வின் ரூ.21-க்கு 3-GB  சலுகை- உள்ளே!! title=

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வழக்கமான சலுகையில் மாற்றம் செய்திருந்தது. சில பிளான்களின் விலையை 50 ரூபாய் குறைத்து சில பிளான்களின் டேட்டா அளவை அதிகரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மிகவும் குறைவான விலையில் டேட்டா பேக்குகளை அறிவித்திருக்கிறது. 

ஒரு நாளைக்கு தரப்படும் டேட்டா தீர்ந்துவிட்ட பிறகு டேட்டா தேவைப்பட்டால் இந்த பூஸ்டர் பேக்குகளைப் பயன்படுத்தி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும். 11 ரூபாய் பேக் மூலமாக 400MB அதிவேக 4-ஜி டேட்டாவைப் பெறலாம். 21 ரூபாய் பேக் மூலமாக 1GB டேட்டாவையும், 51 ரூபாய் பேக் மூலமாக 3GB டேட்டாவையும், மற்றும் 101 ரூபாய் பேக் மூலமாக 6GB டேட்டாவையும், பெற முடியும். 

ஏற்கெனவே பயன்படுத்தப்படும் பிளானின் வேலிடிட்டியே இதற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64kbps-ஆக குறைக்கப்படும்.

Trending News