2022 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய ‘ஹேப்பி நியூ இயர் 2023 திட்டம்’ சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகாம் நிறுவனம் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நன்மைகளை சமீபத்திய பேக்குடன் வழங்குகிறது. ப்ரீபெய்ட் சலுகை ஏற்கனவே அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் MyJio செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் விலை 2023 ரூபாய் ஆகும் மேலும் ஜியோ நீண்ட காலமாக வழங்கி வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளில் ஒன்றாகும்.
ஜியோ ஹாப்பி நியூ இயர் 2023 ஆஃபர்
புதிய ஜியோ ஹேப்பி நியூ இயர் 2023 திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் அழைப்புடன் வருகிறது. இதில் மக்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள், அதாவது வாடிக்கையாளர் 9 மாதங்களுக்கு மொத்தம் 630 ஜிபி டேட்டாவைப் பெறுவர். இதற்கிடையில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் 2.5 ஜிபி டேட்டாவை முடித்துவிட்டால், இணைய வேகம் குறையும், நீங்கள் புதிய ஆட்-ஆன் டேட்டா பேக்கை வாங்க வேண்டும் அல்லது 2.5 ஜிபி டேட்டாவை மீண்டும் பெற அடுத்த நாள் காத்திருக்க வேண்டும்.
அதேபோல் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. புதிய சந்தாதாரர்களுக்கான ஜியோ ஆப்ஸ் மற்றும் அமேசான் மொபைல் பிரைம் பதிப்பிற்கான பாராட்டு அணுகல் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த புதிய ஹேப்பி நியூ இயர் திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஏராளமான டேட்டா சலுகைகளை வழங்குகிறது. ரூ.2023 விலையில் கிடைக்கும் புதிய ஹேப்பி நியூ இயர் திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ஜியோவின் இந்த திட்டத்தை தேர்வு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் Jio.com, MyJio செயலி, Google Pay மற்றும் PhonePe போன்ற தளங்களின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
இதற்கிடையில் இந்த புதிய ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர் எப்போது முடிவடையும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் புத்தாண்டு சலுகை என்பதால் சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, ரிலையன்ஸ் ஜியோ தனது 2023 புத்தாண்டு சலுகையின் ஒரு பகுதியாக ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தையும் திருத்தியுள்ளது. இது இப்போது 75 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி தவிர, 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை நிறுவனம் வழங்குகிறது. ப்ரீபெய்ட் பேக்கில் ஏற்கனவே தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது! புத்தாண்டில் புதிய திருப்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ