நாட்டில் 5ஜி சேவையைத் தொடங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் இந்த தீபாவளி முதல் அதாவது அக்டோபர் 24-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக, இந்த சேவைகள் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வழங்கப்படும். நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ அதிக விலைக்கு ஏலம் எடுத்தது.
தொடக்கத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை (5G Network) வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது. 2023 டிசம்பரில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இவை மற்ற நகரங்களுக்கும் விரைவாக விரிவுபடுத்தப்படும். இது உலகின் மிகப்பெரிய ஜியோ 5ஜி சேவையாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
முகேஷ் அம்பானி மேலும் கூறுகையில், 'ஜியோ 5ஜி சேவைகள் அனைவரையும், அனைத்து இடங்களிலும் மற்றும் அனைத்தையும் இணைக்கும் வகையிலான மிக உயர்ந்த தரத்துடன் கூடிய சேவையாக இருக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு சார்ந்த பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உலகின் மிகச் சிறந்த, மிகபெரிய அளவிலான 5ஜி நெட்வொர்க்காக ஜியோ 5ஜி இருக்கும். மற்ற ஆபரேட்டர்களைப் போலல்லாமல், ஜியோவின் 5G நெட்வொர்க், 4G நெட்வொர்க்குகளின் மீதான பூஜ்ஜியச் சார்புடன் தனித்து நிற்கும்.
மேலும் படிக்க | 1G முதல் 5G வரை; உலகையே மாற்றப் போகும் 5G கடந்து வந்த பாதை
ஸ்பெக்ட்ரம், கேரியர் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் மற்றும் முழுமையான 5G கட்டமைப்பு ஆகியவற்றின் கலவையான நுட்பத்தினால், ஜியோ நிறுவனத்தின் கவரேஜ், நெட்வொர்க் திறன் மற்றும் தரம் மிகச்சிறந்ததாக இருக்கு என ரிலயன்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜியோ உள்நாட்டில் ஒரு எண்ட்-டு-எண்ட் 5G ஸ்டேக்கை உருவாக்கியுள்ளது, இது முற்றிலும் கிளவுட் நேட்டிவ் ஆகும். 5G உடன், ஜியோ கனெக்டட் இண்டெலிஜென்ஸ் மூலம் பில்லியன் கணக்கான ஸ்மார்ட் சென்சார்களை அறிமுகப்படுத்தும்.இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸை (IoT) தூண்டும். இது நான்காவது தொழில்துறை புரட்சியை ஏற்படுத்தும். இது அனைவரையும், அனைத்து இடங்களிலும் மற்றும் அனைத்தையும் இணைக்கும் மிக உயர்ந்த தரத்தை கொண்டிருக்கும். அதோடு கட்டணமும் குறைவாகவே இருக்கும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும் ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ