உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி வேலை செய்யுமா? இப்படி தெரிந்துகொள்ளலாம்

Reliance Jio 5G: நோக்கியா, ஒப்போ, சியோமி, சாம்சங் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் சந்தையில் 5ஜி-ரெடி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 12:34 PM IST
  • வரும் மாதங்களில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
  • ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா என்பதை எப்படி அறிவது?
உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி வேலை செய்யுமா? இப்படி தெரிந்துகொள்ளலாம் title=

வரும் மாதங்களில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா-ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றைப் பார்க்கவும் அணுகவும் முடியும். பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. 

நோக்கியா, ஒப்போ, சியோமி, சாம்சங் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் சந்தையில் 5ஜி-ரெடி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. தற்போது, ​​இந்தியாவில் சாம்சங் கேலக்சி Z ஃபோல்ட் Fold 4 5ஜி, சாம்சங் கேலக்சி எஸ்22, எஸ்22+ மற்றும் எஸ்22 அல்ட்ரா, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற இன்னும் பல 5ஜி ஃபோன்கள் கிடைக்கின்றன. இவற்றில் உங்கள் தேவக்கேற்ற போனை நீங்கள் தேர்வு செய்யலாம். 

இருப்பினும், ஏற்கனவே உங்களிடம் இருக்கும் மொபைல் உங்களுக்கு விருப்பமாக இருந்து, அதை மாற்ற உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து, அதே சமயம்,  5G சேவையையும் தவறவிட விருப்பம் இல்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா எனச் சரிபார்க்கவும். சரிபார்க்க, உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் படிக்க | மற்றொரு மைல்கல்லை அடையப் போகும் ஜியோ நிறுவனம் 

உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா என்பதை எப்படி அறிவது?

ஸ்டெப் 1: முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்க் ஆப்புக்கு செல்லவும்.

ஸ்டெப் 2: அங்கு, 'Wi-Fi & Networks' ஆப்ஷனுக்குச் செல்லவும். சில ஃபோன்களில் அது 'நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்' அல்லது 'நெட்வொர்க்' என இருக்கலாம்.

ஸ்டெப் 3: அடுத்து, 'சிம்' அல்லது 'சிம் & நெட்வொர்க்' ஆப்ஷனை டேப் செய்யவும். 

ஸ்டெப் 4: பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பின்னர் 'விருப்பமான நெட்வொர்க் வகை' (ஃபேவரட் நெட்வொர்க் டைப்) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: உங்கள் ஸ்மார்ட்போன் 5G நெட்வொர்க்கை ஆதரித்தால், 4G மற்றும் 3G உடன் 5G விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இருப்பினும், ஃபோன் 5G-ஐ ஆதரிக்கவில்லை என்றால், அதில் 5G ஆப்ஷன் இருக்காது. அதாவது உங்கள் தொலைபேசி 5G உடன் வேலை செய்யாது. உங்கள் போன் 5G-ஐ ஆதரிக்கவில்லை என்றால், 5G-இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும் படிக்க | 5G Network in India: விரைவில் 5G ... Reliance Jioவின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News