15 இந்திய மொழிகளில் வெளியான HOOTE செயலி

பேஸ்புக் போல் ஆடியோக்களை லைக் செய்யவும், பகிரவும், கருத்திடவும் HOOTE செயலில் பதிவிட முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 12:38 PM IST
15 இந்திய மொழிகளில் வெளியான HOOTE செயலி title=

கருத்து பரிமாற்றத்துக்காகவும், வீடியோ, புகைப்படங்களை போஸ்ட் செய்யவும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்றவை மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்த சூழலில் சமீபத்தில் ஆடியோவுக்கான சமூக வலைதளமாக கிளப் ஹவுஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய செயலில் பயனர்கள் குழுமங்களாக இணைந்து உரையாடி வருகின்றனர். கிளப் ஹவுசுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் ஸ்பேசஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. 

ALSO READ: அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ்: எஸ்.பி.பி. குரலில் கடைசியாக ஒரு இண்ட்ரோ பாடல்

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் (Rajinikanth) மகள் சவுந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை தொடங்கி உள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ரஜினிகாந்த், குரலை அடிப்படையாக கொண்ட சமூக வலைதளத்தை இந்தியாவில் இருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த செயலியை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார். 

 

 

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஹூட் செயலி மூலம் 60 வினாடி கொண்ட ஆடியோவை பதிவு செய்யவும் பதிவேற்றம் செய்யவும் முடியும். இந்த செயலியின் மூலம் மக்கள் தங்கள் குரல் மூலமாக கருத்துக்களை தெரிவிக்கலாம். சமூக வலைதளங்களின் எதிர்காலம் குரல் தான் என்பதை உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஹூட் செயலி:
* பேசும் ஆடியோவின் பின்னணியில் இசையை சேர்த்து வெளியிடும்.
* நமது விருப்ப மொழியை தேர்வு செய்து ஆடியோக்களை கேட்கலாம்.
* ஆடியோக்களை லைக் செய்ய முடியும்.
* ஆடியோ பதிவுகளுடன் புகைப்படத்தையும் இணைக்க முடியும்.

ALSO READ: சரவெடி: அண்ணாத்த செகண்ட் லுக் ரிலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News