OnePlus மொபைல்களுக்கு பம்பர் ஆபர்கள்! ரூ.12,000 வரை தள்ளுபடி!

OnePlus Offers: ஒன்ப்ளஸ் சேல் நேரத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 06:59 AM IST
  • ஒன்ப்ளஸ் விற்பனையில் நீங்கள் ரூ.12,000 வரை சேமிக்க முடியும்.
  • ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • இந்த சலுகை OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸ் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.
OnePlus மொபைல்களுக்கு பம்பர் ஆபர்கள்! ரூ.12,000 வரை தள்ளுபடி! title=

OnePlus Offers: புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு ஒன்ப்ளஸ் சேல் சிறந்த தேர்வாக இருக்கும், ஒன்ப்ளஸ் சேல் சலுகையை பயன்படுத்தி நீங்கள் தள்ளுபடி விலையில் அசத்தலான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பயனடையலாம்.  தற்போது ஒன்ப்ளஸ் பிராண்ட் அதன் விற்பனையை நேரலை செய்துள்ளது, இந்த அட்டகாசமான விற்பனை மே 9 வரை கிடைக்கிறது.  இந்த நேரத்தில் ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் போன்ற பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.  இந்த விற்பனை உங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்.  நிறுவனத்தின் இந்த சலுகைக்கால விற்பனையில் உங்களுக்கு ஒன்ப்ளஸ் 10 ப்ரோ, ஒன்ப்ளஸ் 10ஆர் மற்றும் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் வாங்கி பயன்பெற்று கொள்ளலாம்.  இது தவிர, ஸ்மார்ட் டிவிகள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் என பல பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.  

மேலும் படிக்க | Jio Vs Amazon Vs Netflix vs Disney Hotstar: மலிவான, மிகச்சிறந்த ஓடிடி தளம் எது?

ஒன்ப்ளஸ் விற்பனையில் நீங்கள் ரூ.12,000 வரை சேமிக்க முடியும், இந்த சலுகை பிராண்டின் முதன்மை சாதனங்களில் கிடைக்கிறது.  இது தவிர வங்கி சலுகைகளையும் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமாக மொபைலை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள முடியும்.  ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுவதுடன், கூடுதலாக எக்ஸ்சேஞ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.  மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்த சலுகைகால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.  எடுத்துக்காட்டாக, ஒன்ப்ளஸ் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, ​​நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒன்ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் பட்ஸ் 2ஆர் ஆகியவற்றில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.  இருப்பினும், இந்த சலுகை OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸ் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனையில் நீங்கள் ஒன்ப்ளஸ் 10டி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்டை ரூ.44,999க்கு வாங்க முடியும், ஆனால் இந்த சாதனத்தில் வழக்கமான விலை ரூ.49,999 ஆகும்.  அதே சமயம் இந்த சலுகையினை பயன்படுத்தி  ரூ.66,999 விலை மதிப்புக்கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.55,999 விலைக்கு வாங்க முடியும்.  மேலும் இந்த சலுகையானது மற்ற வேரியன்ட் மொபைல்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது. இந்த விற்பனையில் ரூ.38,999 விலை மதிப்புக்கொண்ட ஒன்ப்ளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.30,999 விலைக்கு வாங்கலாம்.  அடுத்ததாக 8ஜிபி ரேம் வேரியண்டை கொண்ட ஒன்ப்ளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.37,999 விலைக்கு வாங்கலாம்.  மேலும் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மேலும், OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 50MP பிரதான கேமரா மற்றும் Mediatek Dimensity 1300 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,999. அமேசானில் வாங்கினால், 2000 ரூபாய்க் நேரடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு மட்டுமே.  OnePlus 10R 5G போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகம் உள்ளது. இது 50MP பிரதான கேமரா, 6.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் MTK D8100 Max செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது. HSBC வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | வாட்ஸ் அப் சாட்டை லாக் செய்து வைப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News